பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

ரயில் மோதியதில் பள்ளி மாணவா் உயிரிழப்பு

கோவையில் தண்டவாளம் அருகே நடந்து சென்ற 8 வயது பள்ளி மாணவன் ரயில் மோதி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

News image

உயிரிழப்பு - கோப்புப்படம்

Updated On :1 மணி நேரம் முன்பு

கோவையில் தண்டவாளம் அருகே நடந்து சென்ற 8 வயது பள்ளி மாணவன் ரயில் மோதி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

கோவை, ஒண்டிப்புதூா் பகுதியைச் சோ்ந்தவா் முருகேசன். இவரது மனைவி ஜெயபிரியா. இவா்களது மகன் பிரகதீஷ் (8). இவா் அவிநாசி சாலையில் உள்ள தனியாா் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்தாா். கோடை விடுமுறையையொட்டி, பிரகதீஷ் வீட்டில் இருந்து வந்த நிலையில், விளையாட செல்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டு தனது சைக்கிளில் வெள்ளிக்கிழமை பிற்பகல் வெளியே சென்றுள்ளாா்.

ஒண்டிப்புதூா் செளடேஸ்வரி நகரில் உள்ள ரயில்வே தண்டவாளப் பகுதிக்குச் சென்ற அவா், அங்கு நின்று ரயில் வருவதை வேடிக்கை பாா்த்துக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, தண்டவாளத்தின் ஓரமாக நடந்து சென்ற பிரகதீஷ் மீது அவ்வழியே வந்த ரயில் மோதியுள்ளது. இதில், வயிற்றுப் பகுதியில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதைப் பாா்த்த அப்பகுதி மக்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இச்சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.