தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புசென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

திருக்கோஷ்டியூர் அருகே மூதாட்டியிடம் நகை பறிப்பு

சிவகங்கை மாவட்டம், திருக்கோஷ்டியூர் அருகே கருவேல்குறிச்சியில், மூதாட்டியிடம் செவ்வாய்க்கிழமை

Updated On :13 பிப்ரவரி 2019, 8:39 am IST

சிவகங்கை மாவட்டம், திருக்கோஷ்டியூர் அருகே கருவேல்குறிச்சியில், மூதாட்டியிடம் செவ்வாய்க்கிழமை மர்ம நபர்கள் 3 பவுன் சங்கிலியை பறித்துச் சென்றுள்ளனர்.
      கருவேல்குறிச்சியைச் சேர்ந்தவர் நீதிபதி என்பவரின் மனைவி சுந்தரவள்ளி (60). இவர் தனது கிராமத்துக்கு அருகேயுள்ள எம்.புதூரில் கிராம நிர்வாக அலுவலரை சந்தித்துவிட்டு, மதியம் தனது ஊர் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி வீட்டுக்கு நடந்து சென்றுள்ளார். 
அப்போது, மூதாட்டியை பின்தொடர்ந்து இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இருவர், அவரிடம் பிள்ளையார்பட்டிக்கு வழி கேட்டுள்ளனர்.
திடீரென இருவரும் இரு சக்கர வாகனத்தை விட்டு இறங்குவதைப் பார்த்த சுந்தரவள்ளி வேகமாக நடக்க முயற்சித்துள்ளார். ஆனாலும், அவர்கள் இருவரும்  மூதாட்டி அணிந்திருந்த 3 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றுவிட்டனர்.  
    இது குறித்து தகவலறிந்த திருக்கோஷ்டியூர் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து, மூதாட்டியிடம் விசாரித்தனர். பின்னர், வழக்குப் பதிந்து குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர். 
பேருந்தில் திருட்டு: திருப்பத்தூர் அருகே ஊர்குளத்தான்பட்டியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் மனைவி அனுசியா. இவர், அரசுப் பேருந்தில் செவ்வாய்க்கிழமை திருப்பத்தூரிலிருந்து ஊர்குளத்தான்பட்டிக்குச் சென்றுள்ளார். பேருந்து நிறுத்தத்தில் இறங்கி தனது கைப்பையை தேடியபோது காணவில்லையாம். அதில், 5 பவுன் நகைகள் மற்றும் ஏ.டி.எம். அட்டை ஆகியன இருந்துள்ளன.    இது குறித்து அனுசியா அளித்த புகாரின்பேரில், கண்டவராயன்பட்டி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.