கேரளம், அஸ்ஸாமில் வேட்புமனு தாக்கல் இன்று கடைசிஅமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தது 16,700 மெட்ரிக் டன் எல்பிஜிதேர்தல் நடவடிக்கையால் ‘ஹெச்பிவி' தடுப்பூசி திட்டம் பாதிக்காது: சுகாதாரத் துறைவெளிப்பகுதி பறவைகளால் கிண்டி பூங்காவில் பரவிய பறவைக் காய்ச்சல்! ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரானுக்கு டிரம்ப் 48 மணி நேர கெடுமுதல்வர் ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் குழு சந்திப்பு! இன்று தொகுதி உடன்பாடு?தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான நோட்டீஸ் மீது நடவடிக்கை எப்போது?எதிா்க்கட்சிகள் காத்திருப்பு! கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

இளையான்குடி, திருப்புவனம் பகுதிகளில் திமுகவினர் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

இளையான்குடியில் திமுகவினர் தமிழகத்தின் முன்னாள் முதல்வரான கருணாநிதியின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.

News image

நலத்திட்ட உதவிகள் வழங்கிய திமுகவினர்

Updated On :7 ஆகஸ்ட் 2020, 12:54 pm

DIN

இளையான்குடியில் திமுகவினர் தமிழகத்தின் முன்னாள் முதல்வரான கருணாநிதியின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி, திருப்புவனம் பகுதிகளில் வெள்ளிக்கிழமை திமுக தலைவர் கருணாநிதியின் இரண்டாமாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அக்கட்சியினர் நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.

இளையான்குடி மேற்கு ஒன்றிய திமுக சார்பில் ஏராளமான கிராமங்களில் கருணாநிதியின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. திமுக தொண்டரணி, விவசாய அணி சார்பில் தாயமங்கலம், முனைவென்றி ஆகிய இடங்களில்  உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் மருத்துவப் பணியாளர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்கு மரியாதை செய்யப்பட்டு அவர்களுக்கு அரசி, பருப்பு, முகக்கவசங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

பெரும்பச்சேரி, இளமனூர் ஊராட்சிகளில் திமுக நெசவாளர் அணி, மாணவரணி சார்பில் தூய்மைப் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள், முகக்கவசங்கள் வழங்கப்பட்டது. முன்னதாக இந்த கிராமங்களில் மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டன.

இந்நிகழ்ச்சிகளில் திமுக மேற்கு ஒன்றியச் செயலாளர் சுப.மதியரசன், அவைத் தலைவர் பெரியசாமி, நகர்ச் செயலாளர் நஜூமுதீன், தொண்டரணி புலிக்குட்டி,ஊராட்சி செயலாளர் சத்தியேந்திரன், மாணவரணி பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

திருப்புவனத்தில் மேற்கு ஒன்றிய திமுகவினர் கருணாநிதி உருவப்படத்துக்கு மாலைகள் அணிவித்தும் மலர்கள் தூவியும் மரியாதை செலுத்தினர். அதன்பின் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் சேங்கை மாறன் தூய்மைப் பணியாளர்களுக்கு மரியாதை செய்து அவர்களுக்கும் பெண்களுக்கும் சேலைகள், முகக்கவசங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சிக்கு திமுக மேற்கு ஒன்றியச் செயலாளர் வசந்தி சேங்கைமாறன் தலைமை தாங்கினார். நகரச் செயலாளர் நாகூர்கன் முன்னிலை வகித்தார், திருப்புவனம் ஒன்றியத்தைச் சேர்ந்த பூவந்தி, பாட்டம், காஞ்சிரங்குளம், மேலராங்கியன் இந்திராநகர் உள்ளிட்ட கிராமங்களில் திமுக சார்பு அணிகள் சார்பில் பொதுமக்கள், மாணவர்கள், தூய்மைப்பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட துணைச் செயலாளர் சேங்கைமாறன்,  மீனவரணி துணை அமைப்பாளர் அண்ணாமலை மற்றும் நிர்வாகிகள் மகேந்திரன், தேவதாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.