திருட்டு வழக்குகளில் மீட்கப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் உரியவர்களிடம் ஒப்படைப்பு
காரைக்குடியில் பல்வேறு திருட்டு வழக்குகளில் மீட்கப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்பிலான தங்கம், வைர நகைகளை காவல்துறையினர் உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.


காரைக்குடியில் பல்வேறு திருட்டு வழக்குகளில் மீட்கப்பட்ட ரூ. 10 லட்சம் மதிப்பிலான தங்கம், வைர நகைகளை காவல்துறையினர் உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி காவல் உட்கோட்டத்தில் காரைக்குடி வடக்கு, தெற்கு, சோமநாதபுரம், பள்ளத்தூர் ஆகிய காவல் நிலையங்களில் பதிவான பல்வேறு திருட்டு வழக்குகளில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளிடமிருந்து மீட்கப்பட்ட தங்க நகைகள், வைர நகைகளை காரைக்குடி துணை காவல் கண்காணிப்பாளர் அருண் புதன்கிழமை உரியவர்களிடம் வழங்கினார்.
காரைக்குடி அம்மன் சன்னதி பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவரது வீட்டில் திருடு போன 56 கிராம் தங்கக் கட்டி, 9 கிராம் தங்கச் சங்கிலி, கீழச்சிவல்பட்டியைச் சேர்ந்த கவிதா என்பவரின் பறிபோன 11 பவுன் தங்கச் சங்கிலி, பலவான்குடியைச் சேர்ந்த மூதாட்டி பாப்பாத்தியின் பறி போன 4 பவுன் தங்கச் சங்கிலி, ஆத்தங்குடி முத்துபட்டணத்தைச் சேர்ந்த முதியவர் வீரப்பனின் பறி போன 5 பவுன் தங்கச் சங்கிலி, கோவிலூர் அண்ணா நகரைச் சேர்ந்த பாண்டிச்செல்வியின் பறிபோன 7 பவுன் தாலிச்சங்கிலி, காரைக்குடி தந்தை பெரியார் நகர் 2 ஆவது வீதியில் உள்ள ருக்மணி என்பவரின் வீட்டில் திருடுபோன 10.5 பவுன் தங்க நகைகள், காரைக்குடி சத்தியமூர்த்தி நகர் சுப்பிரமணியன் என்பவர் வீட்டில் திருடு போன 5 பவுன் வைர நெக்லஸ், வைரத்தோடுகள், மோதிரங்கள் ஆகியவை காவல்துறையினரால் குற்றவாளிகளிடமிருந்து மீட்கப்பட்டன.
இவை அனைத்தையும் உரியவர்களிடம் ஒப்படைக்குமாறு சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரோகித்நாதன் ராஜகோபால் உத்தரவிட்டிருந்தார். அதன் பேரில் காரைக்குடி துணை காவல் கண்காணிப்பாளர் அருண் உரியவர்களிடம் வழங்கினார்.
இந்நிகழ்வில் வடக்கு காவல்நிலைய ஆய்வாளர் சுந்தரமாகாலிங்கம், குற்றப் பிரிவு ஆய்வாளர் சுப்பிரமணியன், பள்ளத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் தேவகி மற்றும் சார்பு ஆய்வாளர்கள், காவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...