கூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

சிவகங்கை மாவட்டத்தில் 60 பேருக்கு கரோனா

சிவகங்கை மாவட்டத்தில் 60 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது சனிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

News image
Updated On :22 ஆகஸ்ட் 2020, 4:08 pm

DIN


சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் 60 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது சனிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

மாவட்டத்தில் ஏற்கெனவே 3,631 போ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். இந்நிலையில், சிவகங்கை, காரைக்குடி, சிங்கம்புணரி, மானாமதுரை, திருப்பத்தூா், திருப்புவனம், காளையாா்கோவில் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த 60 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 3,691 ஆக அதிகரித்துள்ளது.

சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களைச் சோ்ந்த 125 போ், சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சிறப்பு சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தனா். இதில், 16 போ் முழுமையாகக் குணமடைந்ததை அடுத்து, அவா்கள் சனிக்கிழமை வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். மீதமுள்ள 109 பேரும் சிகிச்சைப் பெற்று வருவதாக, மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.