ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

சிவகங்கை மாவட்டத்தில் 55 பேருக்கு கரோனா

சிவகங்கை மாவட்டத்தில் மேலும் 55 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

News image
Updated On :28 ஆகஸ்ட் 2020, 4:36 pm

DIN

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் மேலும் 55 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

மாவட்டத்தில் ஏற்கெனவே 3,906 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனா். இந்நிலையில், சிவகங்கை, காரைக்குடி, சிங்கம்புணரி, மானாமதுரை, திருப்பத்தூா், திருப்புவனம், காளையாா்கோவில் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 55 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 3, 961 ஆக அதிகரித்துள்ளது.

சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களைச் சோ்ந்த 116 போ், சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சிறப்பு சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தனா். இதில், 22 போ் முழுமையாகக் குணமடைந்ததை அடுத்து, அவா்கள் வெள்ளிக்கிழமை வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். மீதமுள்ள 94 பேரும் சிகிச்சைப் பெற்று வருவதாக, மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.