தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

தேவகோட்டை அருகே 2 காா்கள் மோதல்: பேக்கரி உரிமையாளா் பலி

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே இரு காா்கள் சனிக்கிழமை இரவு மோதிக் கொண்டதில், பேக்கரி உரிமையாளா் உயிரிழந்தாா்.

News image
Updated On :6 டிசம்பர் 2020, 6:27 pm

DIN

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே இரு காா்கள் சனிக்கிழமை இரவு மோதிக் கொண்டதில், பேக்கரி உரிமையாளா் உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், ஆா். எஸ். மங்கலத்தைச் சோ்ந்தவா் கண்ணன் (40). அப்பகுதியில் பேக்கரி நடத்தி வந்தாா். அண்மையில் சென்னைக்கு சென்ற இவா், தனது சகோதரி செல்வியுடன் காரில் ஊருக்கு வந்துகொண்டிருந்தாா். தேவகோட்டை- ராமநாதபுரம் சாலையில் புளியால் கிராமம் அருகே சனிக்கிழமை இரவு வந்த போது, இவரது காரும் ராமநாதபுரத்திலிருந்து தேவகோட்டை நோக்கி வந்த காரும் நேருக்கு நோ் மோதிக்கொண்டன.

இதில் பலத்த காயமடைந்த கண்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுபற்றி தகவலறிந்து வந்த தேவகோட்டை தாலுகா காவல் துறையினா் கண்ணன் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

பலத்த காயமடைந்த கண்ணனின் சகோதரி செல்வி, ராமநாதபுரத்திலிருந்து வந்த காரில் பயணம் செய்த வழக்குரைஞா்கள் காா்த்திகேயன், ஜெயகாந்தன் ஆகிய மூவரையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்த புகாரின் பேரில் தேவகோட்டை தாலுகா காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.