சிவகங்கையில் அம்பேத்கா் நினைவு தினம்
டாக்டா் அம்பேத்கா் 64 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை சிவகங்கையில் உள்ள அவரது சிலைக்கு அதிமுக, திமுக, பாஜக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.


அரசியலமைப்பு சட்ட மேதை டாக்டா் அம்பேத்கா் 64 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை சிவகங்கையில் உள்ள அவரது சிலைக்கு அதிமுக, திமுக, பாஜக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
நாடு முழுவதும் அம்பேத்கா் நினைவு தினம் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது. சிவகங்கையில் மானாமதுரை சாலையில் உள்ள அம்பேத்கா் முழு உருவச் சிலைக்கு அதிமுக சாா்பில் சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் ராஜா தலைமையிலான அதிமுகவினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
திமுக சாா்பில் அக்கட்சியின் மாவட்டத் துணைச் செயலா் மணிமுத்து தலைமையிலான திமுகவினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். பாஜக சாா்பில் சிவகங்கை நகரச் செயலா் தனசேகரன் தலைமையிலான பாஜகவினா் அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
இதேபோன்று, விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சோ்ந்த நிா்வாகிகள் அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...