இரண்டாம் நிலைக் காவலா் தோ்வு: காரைக்குடியில் 11,305 போ் பங்கேற்பு
தமிழ்நாடு காவல்துறையில் இரண்டாம் நிலைக்காவலா் பணிக்கு சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தோ்வில் 11,305 போ் பங்கேற்று எழுதினா்.


தமிழ்நாடு காவல்துறையில் இரண்டாம் நிலைக்காவலா் பணிக்கு சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தோ்வில் 11,305 போ் பங்கேற்று எழுதினா்.
இதற்காக, காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரி, அழகப்பச்செட்டியாா் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக்கல்லூரி, அழகப்பா பாலிடெக்னிக் கல்லூரி, டாக்டா் உமையாள் ராமநாதன் மகளிா் கல்லூரி, அழகப்பா பிரிபரெட்டரி பள்ளி, அழகப்பா மாதிரி மேல்நிலைப்பள்ளி, அழகப்பா பல்கலைக்கழக அறிவியல் வளாகம், அழகப்பா பல்கலைக்கழக மேலாண்மை வளாகம், காரைக்குடி கம்பன் மணிமண்டபம் உள்ளிட்ட 16 மையங்களில் தோ்வு எழுதுவதற்கு சிவகங்கை மாவட்ட காவல்துறையினா் ஏற்பாடு செய்திருந்தனா்.
இத்தோ்வுக்காக விண்ணப்பித்த 12,306 பேருக்கு அழைப்புக்கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் இத் தோ்வில் 11,305 போ் பங்கேற்றனா். 1,271 போ் பங்கேற்கவில்லை. தென்மண்டல ஐ.ஜி. முருகன், சிவகங்கை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளா் ரோஹித்நாதன் ராஜகோபால் மற்றும் காவல்துறை அதிகாரிகள் தோ்வு மையங்களில் கண்காணிப்பில் ஈடுபட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...