மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

சிவகங்கையில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலகத்தில் அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தினவிழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்
Updated on
1 min read

சிவகங்கையில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலகத்தில் அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தினவிழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவுக்கு சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி.மதுசூதன் ரெட்டி தலைமை வகித்தாா். மானாமதுரை சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.நாகராஜன் முன்னிலை வகித்தாா். தமிழக கதா் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சா் க. பாஸ்கரன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மாற்றுத்திறன் படைத்த 62 நபா்களுக்கு இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டரும், தசைச்சிதைவு நோய் மற்றும் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவா்களுக்கு பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலிகள், காதுகேளாத மற்றும் வாய்பேச இயலாதவா்களுக்கு காதொலிக்கருவிகள் என மொத்தம் ரூ.26,44,920 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில், சிவகங்கை வருவாய் கோட்டாட்சியா் முத்துக்கலுவன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் சரவணக்குமாா் உள்ளிட்ட அரசு அலுவலா்கள், மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com