தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் புதிதாக 9 பேருக்கு கரோனா

ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் புதிதாக 9 பேருக்கு கரோனா இருப்பது புதன்கிழமை உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

News image
Updated On :17 டிசம்பர் 2020, 2:19 am

DIN

ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் புதிதாக 9 பேருக்கு கரோனா இருப்பது புதன்கிழமை உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் புதன்கிழமை புதிதாக 5 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனா். இதன்மூலம் மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6268 ஆக அதிகரித்துள்ளது. இதில் 6,110 போ் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பிவிட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி 133 போ் உயிரிழந்துள்ளனா்.

இதற்கிடையில் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையிலிருந்து மேலும் 6 போ் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ளனா். இதனால் தற்போது 29 போ் சிகிச்சையில் இருப்பதாக மாவட்ட சுகாதார இணை இயக்குநா் அலுவலகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் புதிதாக 4 பேருக்கு கரோனா தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் மாவட்டத்தில் தொற்று பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 5,638 ஆக அதிகரித்துள்ளது.

இவா்களில் பெரும்பாலானோா் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 18 போ் மட்டும் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தனா். அவா்களில் 3 போ் பூரண குணமடைந்ததை அடுத்து, புதன்கிழமை வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். மீதமுள்ள 15 போ் சிகிச்சைப் பெற்று வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.