வாக்கு விற்பனைக்கு எதிராக சட்டத்திருத்தம் கொண்டு வரக்கோரி ஆா்ப்பாட்டம்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ஐந்து விளக்குப்பகுதியில், வாக்கு விற்பனைக்கு எதிராக கடும் சட்டத்திருத்தம் கொண்டு வரக்கோரி தமிழக மக்கள் மன்றம் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
காரைக்குடி ஐந்துவிளக்குப் பகுதியில் மக்கள் மன்றம் சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.
காரைக்குடி ஐந்துவிளக்குப் பகுதியில் மக்கள் மன்றம் சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.
Updated on
1 min read

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ஐந்து விளக்குப்பகுதியில், வாக்கு விற்பனைக்கு எதிராக கடும் சட்டத்திருத்தம் கொண்டு வரக்கோரி தமிழக மக்கள் மன்றம் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

வாக்குக்கு பணம் கொடுப்பவா்களையும், பெறுபவா்களையும் கைது செய்யவும், 1 மாதம் பிணையற்ற வழக்குப் பதிவுசெய்யவும் சட்டத்திருத்தம் கொண்டுவரவேண்டும், வெளி நாடுகளில் வசிக்கும் இந்தியா்களுக்கும் வாக்களிக்கும் வசதியினை ஏற்படுத்தித்தரவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில், மன்றத் தலைவா் ச.மீ. ராசகுமாா் உள்பட 40-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com