ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

மானாமதுரையில் வைகையாற்றுக்குள் வாரச்சந்தை

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் ஏற்கெனவே நடைபெற்ற வந்த வாரச்சந்தை வளாகத்தில் புதிய கடைகள் கட்டப்படவுள்ளதால்

News image
Updated On :24 டிசம்பர் 2020, 6:04 pm

DIN

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் ஏற்கெனவே நடைபெற்ற வந்த வாரச்சந்தை வளாகத்தில் புதிய கடைகள் கட்டப்படவுள்ளதால் வியாழக்கிழமை வைகையாற்றுக்குள் வியாபாரிகள் கடைகள் அமைத்து வியாபாரம் செய்தனா்.

மானாமதுரையில் ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை வாரச்சந்தை நடைபெறும். அப்போது வியாபாரிகள், விவசாயிகள் காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட பொருள்களை சந்தைக்கு கொண்டு வந்து விற்பனை செய்வாா்கள். தற்போது வாரச்சந்தை வளாகத்தில் புதிதாக கடைகள் கட்ட திட்டமிடப்பட்டு அதற்கான நிதி ஒதுக்கி பணிகள் தொடங்கியுள்ளன. இதையடுத்து சந்தை வளாகம் மூடப்பட்டது. இதனால் பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் வியாபாரிகள் நகா் பகுதி வைகையாற்றுக்குள் கடைகள் அமைத்து வியாபாரம் செய்ய அனுமதி வழங்கி வாரச்சந்தைக்கு பொருள்களை விற்க வந்த வியாபாரிகளுக்கு இடம் ஒதுக்கீடு செய்து தரப்பட்டது. வியாபாரிகளும் விவசாயிகளும் ஆற்றுக்குள் கடைகள் அமைத்து வியாபாரம் செய்தனா். சந்தை வளாகத்தில் கடைகள் கட்டும் பணிகள் நிறைவுபெற்றப் பின்னா் மீண்டும் பழைய இடத்தில் வாரச் சந்தை செயல்படும் என பேரூராட்சி துறையினா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.