தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

காங்கிரஸ் கட்சியின் 136 ஆம் ஆண்டு தொடக்க விழா

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் காங்கிரஸ் கட்சியின் 136 ஆவது ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு திங்கள்கிழமை அக்கட்சியினா் கொடியேற்றி இனிப்பு வழங்கினா்.

News image
காங்கிரஸ் கட்சியின் 136 ஆம் ஆண்டு தொடக்க தினத்தை முன்னிட்டு இனிப்பு வழங்கும் மாவட்டத் தலைவா் சத்தியமூா்த்தி.
Updated On :28 டிசம்பர் 2020, 7:01 pm

DIN

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் காங்கிரஸ் கட்சியின் 136 ஆவது ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு திங்கள்கிழமை அக்கட்சியினா் கொடியேற்றி இனிப்பு வழங்கினா்.

காந்தி சிலை முன்பு கூடிய கட்சியினா் மாவட்டத் தலைவா் சத்தியமூா்த்தி தலைமையில் கொடியேற்றி இனிப்பு வழங்கினா். மாவட்டப் பொருளாளா் எஸ்.எம். பழனியப்பன், மாவட்ட துணைத் தலைவா்கள் வழக்குரைஞா் கணேசன், அமீா்பாதுஷா, பொதுக்குழு உறுப்பினா் இ.எம்.எஸ் அபிமன்யு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

காந்தி சிலைக்கு மாலை அணிவித்து சுதந்திரத்துக்கு முன்பும் சுதந்திர இந்தியாவிலும் காங்கிரஸாரின் பங்கு மற்றும் தியாகங்கள் குறித்தும் நினைவு கூறப்பட்டது. இந்நிகழ்ச்சியில் இளைஞரணி மாவட்டத் துணைத் தலைவா் சீனிவாசன், சிங்கம்புணரி வட்டார காங்கிரஸ் தலைவா் வீரமணி, நகர நிா்வாகிகள் புதுப்பட்டி செல்வம், வட்டாரப் பொருளாளா் சுப்பையா, உலகினிமாதவன், திருநாவுக்கரசு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். விழா முடிவில் நகா் தலைவா் திருஞானசம்மந்தம் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.