பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

மானாமதுரையைச் சேர்ந்த அரசு போக்குவரத்துக்கழக பணிமனை மேலாளருக்கு கரோனா தொற்று உறுதி

சென்னை சென்று வந்த சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் சேர்ந்த அரசு போக்குவரத்துக்கழக கிளை மேலாளருக்கு செவ்வாய்கிழமை கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு

News image
கோப்புப் படம்
Updated On :9 ஜூன் 2020, 8:44 am

DIN

சென்னை சென்று வந்த சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் சேர்ந்த அரசு போக்குவரத்துக்கழக கிளை மேலாளருக்கு செவ்வாய்கிழமை கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது குடும்பத்தினருக்கும் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 

மானாமதுரையில் சிவகங்கை சாலையில் சாஸ்தாநகரில் வசித்து வரும் 52 வயது நபருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இவர் தற்போது மதுரையில் அரசு போக்குவரத்துக்குழக பணிமனையில் கிளை மேலாளராக வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை சென்று அங்கிருந்த தனது மகளை மானாமதுரைக்கு காரில் அழைத்து வந்துள்ளார். 

அதன்பின் தொண்டையில் வலி இருப்பதை உணர்ந்த இவர் சந்தேகப்பட்டு மதுரைக்கு பரிசோதனைக்காக மருத்துவனைக்குச் சென்றார். அங்கு இவரை பரிசோதித்த மருத்துவர்கள் இவருக்கு கரேனா தொற்று இருப்பதை உறுதி செய்தனர். இதையடுத்து இவர் சிவகங்கையில் அரசு மருத்துவமனை கரோனா சிகிச்சை வார்டில் அனுமதிக்கப்பட்டார். 

மேலும் இவரது குடும்பத்தினரை முத்தனேந்தல் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவத்துறையினர் பரிசோதனைக்கு வருமாறு அழைத்து அவர்களுக்கும் கரோனா பரிசோதனை மேற்கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.