மானாமதுரையில் சாலை அமைக்கும் பணியை தொடங்கக்கோரி முற்றுகைப் போராட்டம் நடத்த முடிவு
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பேரூராட்சியில் நிறுத்தப்பட்ட சாலை அமைக்கும் பணியை தொடங்க வலியுறுத்தி முற்றுகைப் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.


சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பேரூராட்சியில் நிறுத்தப்பட்ட சாலை அமைக்கும் பணியை தொடங்க வலியுறுத்தி முற்றுகைப் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
மானாமதுரை பேரூராட்சி 10 வது வார்டைச் சேர்ந்த மதுரை-ராமேஸ்வரம் சாலையை ஒட்டி அமைந்துள்ள நியு வசந்தம்நகர் பகுதி 20 வருடங்களுக்கு முன்பு உருவானது. இங்கு வீடு கட்டி குடியிருப்பவர்கள் பேரூராட்சி நிர்வாகத்திடம் அனுமதி பெற்று வீடுகள் கட்டியுள்ளனர்.இந்தப் பகுதியில் ஏற்கனவே மூன்றுமுறை பேரூராட்சி நிர்வாகம் மூலம் சாலை அமைக்கப்பட்டுள்ளது.
தற்போது நான்காவது முறையாக நியு வசந்தம் நகர் பகுதியில் பேரூராட்சி சார்பில் சாலை அமைக்கும் பணி தொடங்கப்பபட்டது. மானாமதுரை ஒன்றியம் ஆதனூர் கிராமத்தைச் சேர்ந்த சிலர் தங்களது கிராமத்தின் பாசனக் கண்மாய்க்கு தண்ணீர் வரும் கால்வாயை ஆக்கிரமித்து நியு வசந்தம்நகர் பகுதிக்கு சாலை அமைக்கப்படுவதாக புகார் கூறி கடந்தவாரம் சாலை அமைக்கும் பணியை நிறுத்தி போராட்டம் நடத்தினர். அதன்பின் சாலை அமைக்கும் பணி நடக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இந் நிலையில் மேற்கண்ட நியு வசந்தம்நகர் உள்ளிட்ட இப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் தங்கள் பகுதியில் நிறுத்தப்பட்ட சாலை அமைக்கும் பணியை தொடங்கி முடிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வரும் 25 ந் தேதி மானாமதுரை பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக மேற்கண்ட கட்சியின் மானாமதுரை ஒன்றியச் செயலாளர் ஆண்டி, நகர்ச் செயலாளர் விஜயக்குமார் ஆகியோர் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...