பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

மானாமதுரை அருகே குரங்கு கடித்து சிறுமி காயம்

மானாமதுரை அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை குரங்கு கடித்து அந்தச் சிறுமி  காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

News image
Updated On :25 மே 2020, 9:23 am

DIN

மானாமதுரை அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை குரங்கு கடித்து அந்தச் சிறுமி  காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிவங்கை மாவட்டம், மானாமதுரை அருகே கீழமேல்குடி கிராமத்தைச் சேர்ந்தவவர் அர்ச்சுனன். இவரது 7 வயது மகள் தீபிகா கிராமத்தில் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தார். 

அப்போது கிராமத்தின் அருகேயுள்ள வனப்பகுதியிலிருந்து வெளியேறி கிராமத்தில் தோடர்ந்து பொதுமக்களை அச்சுறுத்தி வரும் ஆண் குரங்கு தீபிகாவை கையில் கடித்து குதறியது. 

தீபிகாவின் அலறல் சத்தம் கேட்டு ஒடி வந்த அங்கிருந்தவர்கள் குரங்கை விரட்டியடித்தனர். அதன்பின் காயமடைந்த தீபிகா மானாமதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

பாரதீய ஜனதா கட்சியின் மானாமதுரை கிழக்கு ஒன்றியத் த்லைவர் எஸ்.சங்கரசுப்ரமணியம் கூறுகையில் வனப்பபகுதியிலிருந்து வெளியேறி கீழமேல்குடி கிராமத்தில் அட்டகாசம் செய்து வரும் ஆண் குரங்கை வனத்துறையினர் பிடித்து மீண்டும் வனப்பகுதியில் விட வேண்டும் என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.