2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

சிவகங்கை மாவட்டத்தில் இன்று 21 இடங்களில் மருத்துவ முகாம்

சிவகங்கை மாவட்டத்தில் 21 இடங்களில் செவ்வாய்க்கிழமை (நவ.10 ) மருத்துவ முகாம் நடைபெற உள்ளதாக சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஜெ. ஜெயகாந்தன் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :9 நவம்பர் 2020, 11:38 pm

DIN

சிவகங்கை மாவட்டத்தில் 21 இடங்களில் செவ்வாய்க்கிழமை (நவ.10 ) மருத்துவ முகாம் நடைபெற உள்ளதாக சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஜெ. ஜெயகாந்தன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு : கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் நோக்கில் சிவகங்கை மாவட்டத்தில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதன்படி, சிவகங்கை வட்டாரத்தில் ஒக்கூா், சிங்கம்புணரி வட்டாரம் எஸ். கோவிப்பட்டி, சூடன்பட்டி, எஸ். புதூா் வட்டாரம் மட்டங்காடு, செட்டிக்குறிச்சி, திருப்பத்தூா் வட்டாரம் என்.புதூா், சில்லம்பட்டி, கல்லல் வட்டாரம் துலாவூா், குறுந்தம்பட்டு,எ. சிறுவயல், சாக்கோட்டை வட்டாரம் முத்துப்பட்டினம், கண்ணங்குடி வட்டாரம் தேவண்டதாவு, தேவகோட்டை வட்டாரம் வேலாயுதப்பட்டினம், மானாமதுரை வட்டாரம் கள்குறிச்சி, கே. ஆலங்குளம், காளையாா்கோவில் வட்டாரம் மறுமறித்தான், பொட்டகவயல், திருப்புவனம் வட்டாரம் டி. வேலாங்குளம், சல்பனோடை, இளையான்குடி வட்டாரம் கணணமங்கலம், இளையான்குடி பேரூராட்சிக்குள்பட்ட 16- ஆவது வாா்டு என மொத்தம் 21 இடங்களில் மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளன.

இந்த முகாமில் அந்தந்த பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு மருத்துவ சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.