2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்கல்

சிவகங்கை மாவட்டத்தில் மின்சாரம் தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு தமிழக முதல்வரின் நிவாரண நிதியுதவி வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :9 நவம்பர் 2020, 11:39 pm

DIN

சிவகங்கை மாவட்டத்தில் மின்சாரம் தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு தமிழக முதல்வரின் நிவாரண நிதியுதவி வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் திருப்புவனம் வட்டம், கழுவன்குளம் கிராமத்தில் அண்மையில் கண்மாய் நீரில் மூழ்கி உயிரிழந்த நவீன், சபரிதரன் ஆகியோரின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சத்துக்கான காசோலையினை தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து மாவட்ட ஆட்சியா் ஜெ. ஜெயகாந்தன் வழங்கினாா். இதேபோன்று, திருப்புவனம் வட்டம், கழுகோ்கடை கிராமத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சாதிக்அலி குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சத்துக்கான காசோலையினை ஆட்சியா் வழங்கினாா். அப்போது, சிவகங்கை மாவட்ட மகளிா் திட்ட அலுவலா் அருள்மணி உள்ளிட்ட வருவாய்த் துறை அலுவலா்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.