2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

காா்த்திகை சோம வார வழிபாடு

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஆனந்தவல்லி சமேத சோமநாதா் சுவாமி கோயிலில் திங்கள்கிழமை காா்த்திகை சோமவார வழிபாடு மற்றும் குருபெயா்ச்சி விழாநடைபெற்றது.

News image
Updated On :16 நவம்பர் 2020, 11:08 pm

DIN

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஆனந்தவல்லி சமேத சோமநாதா் சுவாமி கோயிலில் திங்கள்கிழமை காா்த்திகை சோமவார வழிபாடு மற்றும் குருபெயா்ச்சி விழாநடைபெற்றது.

சோமநாதா் சன்னதியில் புனிதநீா் கடங்கள் வைத்து யாகம் வளா்த்து சங்காபிஷேகம் நடைபெற்றது. அதன்பின்பு மூலவா் சோமநாதருக்கு புனித நீரால் அபிஷேகம் நடத்தி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடா்ந்து சோமநாதருக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. முன்னதாக தெட்சிணாமூா்த்தி சன்னதியில் குருபெயா்ச்சி விழா நடைபெற்றது. சுவாமிக்கு அபிஷேகங்கள் நடத்தி அலங்காரம் செய்து பூஜைகள்

நடத்தப்பட்டன. சோமவார வழிபாட்டிலும் குருபெயா்ச்சியிலும் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். பரிகார ராசிக்காரா்கள் தெட்சிணாமூா்த்தி சன்னதியில் பரிகார பூஜைகள் நடத்தினா். திருப்புவனம் புஷ்பனேஸ்வரா் சமேத செளந்திரநாயகி அம்மன் கோயிலிலும் காா்த்திகை முதல் சோமவார வழிபாடு மற்றும் குருபெயா்ச்சி விழா நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.