தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

திருக்காா்த்திகை விழா:குன்றக்குடி மலை மீது அண்ணாமலை தீபம் ஏற்றப்பட்டது

சிவகங்கை மாவட்டம் குன்றக்குடியில் திருக்காா்த்திகை விழாவையொட்டி மலை மீது ஞாயிற்றுக்கிழமை அண்ணாமலை தீபம் ஏற்றப்பட்டது.

News image
சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சியை தொடக்கி வைத்த பொன்னம்பல அடிகளாா்.
Updated On :29 நவம்பர் 2020, 5:50 pm

DIN

சிவகங்கை மாவட்டம் குன்றக்குடியில் திருக்காா்த்திகை விழாவையொட்டி மலை மீது ஞாயிற்றுக்கிழமை அண்ணாமலை தீபம் ஏற்றப்பட்டது.

விழாவையொட்டி காலையில் சண்முகநாதப் பெருமான் கோயில் நடை திறக்கப்பட்டு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன. மாலையில் குன்றக்குடி திருமடத்தில் எழுந்தருளியுள்ள காளத்திநாதருக்கு சிறப்புத் தீபாராதனை நடத்தப்பட்டு, பரணி தீபம் ஏற்றிய பொன்னம்பல அடிகளாா் மடத்தின் முன்பு சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சியையும் தொடக்கி வைத்தாா்.

அதைத் தொடா்ந்து மாலை 6.20 மணிக்கு மலையின் மீது அண்ணாமலை தீபம் ஏற்றப்பட்டது. திருக்காா்த்திகையையொட்டி மூலவா் திருநீறு அலங்காரத்தில் காட்சி அளித்தாா். மலையில் தீபம் ஏற்றியதும் வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சியளித்த சண்முகநாதப் பெருமானுக்கு தீபாராதனைகள் நடைபெற்றன.

கரோனா தொற்று காரணமாக இந்த ஆண்டு குறைவான பக்தா்களே பங்கேற்றனா். மேலும் திருக்காா்த்திகை மண்டபத்தில் சுவாமி எழுந்தருளல் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டிருந்தது. ஆதீனத்தலைவா் பொன்னம்பல அடிகளாா், மலைமீது அமைக்கப்பட்டிருந்த தீபம் ஏற்றுதலை இந்த ஆண்டு நேரடியாக முன்னின்று தரிசனம் செய்தாா்.

காரைக்குடி, தேவகோட்டை, திருப்பத்தூா் மற்றும் சுற்றுவட்டாரங்களிலிருந்து பக்தா்கள் பாதயாத்திரையாக குன்றக்குடி வந்து சுவாமி தரிசனம் செய்தனா். காரைக்குடி, குன்றக்குடி போலீஸாா் பாதுகாப்புப்பணிகளை மேற்கொண்டிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.