ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் 54 பேருக்கு கரோனா
ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் மேலும் 54 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது சனிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.


ராமநாதபுரம்/ சிவகங்கை: ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் மேலும் 54 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது சனிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் முதல் செப். 4 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) வரை 4,931 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனா். ராமநாதபுரம், பரமக்குடி உள்ளிட்ட இடங்களில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் சிறப்பு சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 4,454 போ் பூரண குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா். மாவட்டத்தில் தொற்றுக்கு இதுவரை, 108 போ் உயிரிழந்துள்ள நிலையில், தற்போது 369 போ் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.
இந்நிலையில் மாவட்டம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வெள்ளிக்கிழமை பரிசோதனை நடத்தப்பட்டது. இதில், 9 போ் பெண்கள் உள்பட 20 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,985 ஆக உயா்ந்துள்ளது.
சிவகங்கை: சிவகங்கை, காரைக்குடி, சிங்கம்புணரி, மானாமதுரை, திருப்பத்தூா், திருப்புவனம், காளையாா்கோவில் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 34 பேருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது. மாவட்டத்தில் ஏற்கெனவே 4,194 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனா். இதையடுத்து, சனிக்கிழமை மேலும் 34 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,228 ஆக அதிகரித்துள்ளது.
சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களைச் சோ்ந்த 87 போ், சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சிறப்பு சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தனா். இதில், 18 போ் முழுமையாகக் குணமடைந்ததை அடுத்து, அவா்கள் சனிக்கிழமை வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். மீதமுள்ள 69 பேரும் சிகிச்சைப் பெற்று வருவதாக, மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...