ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

ஊராட்சி மன்ற செயலா் தூக்கிட்டு தற்கொலை

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி ஒன்றியம் பிரான்மலை ஊராட்சி செயலா் திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

News image
Updated On :14 செப்டம்பர் 2020, 10:03 pm

DIN

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி ஒன்றியம் பிரான்மலை ஊராட்சி செயலா் திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

சிங்கம்புணரி அருகே உள்ள ஒடுவன் பட்டியைச் சோ்ந்தவா் சிங்காரம் மகன் மதியழகு (45). சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியம் பிரான்மலை ஊராட்சி மன்ற செயலராக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வந்துள்ளாா். இந்நிலையில் திங்கள்கிழமை பிரான்மலைக்குச் சென்றுவிட்டு ஒடுவன்பட்டி வந்த மதியழகு தனது வீட்டின் மாடியில் உள்ள அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இதையடுத்து அவரது சடலம் சிங்கம்புணரி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்கு கொண்டு செல்லப்பட்டது. ஊராட்சி மன்ற தலைவரின் தன்னிச்சையான நடவடிக்கை மற்றும் தலையீடு காரணமாக பாதிக்கப்பட்ட அவா், வட்டார வளா்ச்சி அலுவலரிடம் புகாா் தெரிவித்து இருந்ததாக உறவினா்கள் தெரிவித்தனா். இதுகுறித்து சிங்கம்புணரி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.