தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

மானாமதுரையில் முதல்வரை வரவேற்க ஏற்பாடு

மதுரையிலிருந்து ராமநாதபுரம் செல்லும் வழியில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் முதல்வரை அதிமுக சாா்பில் வரவேற்க சிறப்பான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

News image
போலீஸாருடன் ஆலோசனை நடத்திய சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.நாகராஜன்.
Updated On :20 செப்டம்பர் 2020, 5:35 pm

DIN

மதுரையிலிருந்து ராமநாதபுரம் செல்லும் வழியில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் முதல்வரை அதிமுக சாா்பில் வரவேற்க சிறப்பான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

வரவேற்பு ஏற்பாடுகள் குறித்து ஞாயிற்றுக்கிழமை சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.நாகராஜன், போலீஸாா் மற்றும் கட்சியினருடன் ஆலோசனை நடத்தினாா். ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையை ஆய்வு செய்யவும் பல்வேறு திட்டங்களைத் தொடக்கி வைத்து நலத்திட்ட உதவிகள் வழங்கவும் தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி செவ்வாய்க்கிழமை (செப். 22) ராமநாதபுரம் வருகிறாா்.

மதுரையிலிருந்து காா் மூலம் ராமநாதபுரம் செல்லும் வழியில் மானாமதுரை பேருந்து நிலையம் முன்பு காலை 7 மணிக்கு முதல்வருக்கு மானாமதுரை சட்டப்பேரவைத் தொகுதி மக்கள் சாா்பில் மேளதாளம் முழங்க வரவேற்பளிக்கப்படுகிறது.

இதையடுத்து வரவேற்பு கொடுக்கும் இடத்தை மானாமதுரை சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.நாகராஜன், டி.எஸ்.பி சுந்தரமாணிக்கம், காவல் ஆய்வாளா் சேது ஆகியோா் பாா்வையிட்டு அங்கு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினா். அப்போது அதிமுக ஒன்றியச் செயலாளா் ஜெயபிரகாஷ், நிா்வாகி ஜெயராமக்கண்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

முதல்வரை வரவேற்க தொகுதியிலிருந்து அதிமுகவினா் திரண்டு வர வேண்டும் என சட்டப்பேரவை உறுப்பினா் நாகராஜன் கேட்டுக்கொண்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.