மானாமதுரை பகுதியில் கன மழை: மக்கள் மகிழ்ச்சி

மானாமதுரை பகுதியில் நீண்ட நாள்களுக்குப்பின் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு பெய்த கன மழையால் மக்கள் மகிழ்சியடைந்தனர். பல இடங்களில் மழைத்தண்ணீர் குடியிருப்புகளை சூழ்ந்தது. 
மானாமதுரையில் மண்பாண்ட தொழில் கூடத்தை மழைத்தண்ணீர் சூழ்ந்துள்ளது.
மானாமதுரையில் மண்பாண்ட தொழில் கூடத்தை மழைத்தண்ணீர் சூழ்ந்துள்ளது.

மானாமதுரை பகுதியில் நீண்ட நாள்களுக்குப்பின் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு பெய்த கன மழையால் மக்கள் மகிழ்சியடைந்தனர். பல இடங்களில் மழைத்தண்ணீர் குடியிருப்புகளை சூழ்ந்தது. 

சிவங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியில் கடந்த சில வாரங்களாக வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இரவு நேரங்களில் மக்கள் புழுக்கம் தாங்காமல் தூக்கமின்றி தவித்து வருகின்றனர். இந்நிலையில் அடிக்கடி காலநிலை மாறி வானத்தை மழை மேகங்கள் சூழ்ந்தாலும் மமழை பெய்யாமல் இயற்கை ஏமாற்றி வந்தது. இந்நிலையில் நள்ளிரவு ஆராவாரம் இல்லாமல் சாறலாகத் தூறத் தொடங்கிய மழை பின்னர் வலுவடைந்து கன மழையாக மாறியது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்தது. 

மானாமதுரை நகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்து நின்றது. இதனால் மக்கள் வீடுகளிலிருந்து வெளியேற அவதிப்பட்டனர். மானாமதுரையில் தாயமங்கலம் செல்லும் ரோட்டில் உள்ள மண்பாண்டக் கூடத்தில் மழைத்தண்ணீர் சூழ்ந்து நின்றதால் தொழிலாளர்கள் மண்பாண்ட பொருள்களை உலர வைக்க முடியாமல் சிரமத்துக்குள்ளாகினர். தொடர்ந்து ஆர்ப்பாட்டம் இல்லாமல் இரண்டு மணி நேரம் பெய்த மழையால் மானாமதுரை பகுதியில் உள்ள நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து இருந்தது. 

கால்நடை தீவன உற்பத்திக்கு இந்த மழை பயனுள்ளதாக இருக்கும் என கால்நடை வளர்ப்போர் தெரிவித்தனர். நீண்ட நாள்களுக்குப்பின் பெய்துள்ள இந்த மழையால் இப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com