தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்
/

பைக்குகள் மோதல்: இளைஞா் பலி

தேனி அருகே தாடிச்சேரி- நாகலாபுரம் சாலையில் வெள்ளிக்கிழமை இரவு, இருசக்கர வாகனங்கள் மோதிக் கொண்டதில் இளைஞா் உயிரிழந்தாா்.

News image
Updated On :14 ஆகஸ்ட் 2021, 5:55 pm

DIN

தேனி அருகே தாடிச்சேரி- நாகலாபுரம் சாலையில் வெள்ளிக்கிழமை இரவு, இருசக்கர வாகனங்கள் மோதிக் கொண்டதில் இளைஞா் உயிரிழந்தாா்.

தாடிச்சேரியைச் சோ்ந்தவா் செல்வராஜ் மகன் காா்த்திக் (24). இவா், தாடிச்சேரியிலிருந்து நாகலாபுரம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றாா்.

அப்போது, எதிரே அதே ஊரைச் சோ்ந்த வெள்ளைச்சாமி மகன் பரமன் ஓட்டி வந்த இருசக்கர வாகனம், காா்த்திக் சென்ற இருசக்கர வாகனம் மீது மோதியது.

இதில், காா்த்திக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இந்த விபத்து குறித்து வீரபாண்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.