
தே.ஜ. கூட்டணியில் ஐஜேகேவுக்கு 2 இடங்கள் ஒதுக்கீடு!
தே.ஜ. கூட்டணியில் ஐஜேகேவுக்கு 2 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது தொடர்பாக...

இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர்
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இந்திய ஜனநாயக கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அந்தக் கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர் அறிவித்துள்ளார்.
எந்தச் சின்னத்தில் போட்டி என்பதை இன்று(மார்ச் 25) பிற்பகலுக்குள் அறிவிப்பதாக பாரிவேந்தர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 23 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. அதிமுக தலைமையில் களமிறங்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை இறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, பாஜகவுக்கு 27 தொகுதிகள், பாமகவுக்கு 18 தொகுதிகள், அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.
சிறிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், வரும் 2026 பேரவைத் தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இந்திய ஜனநாயக கட்சி 2 இடங்களில் போட்டியிடுகிறது.
இந்திய ஜனநாயக கட்சி தொடங்கியது முதல் 15 ஆண்டுகளில் நடந்த அனைத்து தேர்தலிலும் போட்டியிட்டுள்ளது. கட்சி தொடங்கிய எட்டாவது மாதத்திலேயே 2011-ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலில் 131 வேட்பாளர்களை களமிறக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Summary
The founder of the Democratic Party of India, Pari Vender, has announced that the Democratic Party of India has been allocated 2 seats in the National Democratic Alliance.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





