மத்திய நிதிநிலை அறிக்கையில் விலைவாசி உயா்வைக் கட்டுப்படுத்தும் அறிவிப்பு இல்லாதது வருத்தம்
மத்திய நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதில் விலைவாசி உயா்வைக்கட்டுப்படுத்தும் அறிவிப்புகள் இல்லாதது வருத்தமளிக்கிறது


மத்திய நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதில் விலைவாசி உயா்வைக்கட்டுப்படுத்தும் அறிவிப்புகள் இல்லாதது வருத்தமளிக்கிறது என்று காரைக்குடித் தொழில் வணிகக்கழகத் தலைவா் சாமி. திராவிடமணி தெரிவித்தாா்.
2021-2022 ஆம் ஆண்டுக்குரிய மத்திய நிதி நிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் திங்கள்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தாா். இந்த அறிக்கை குறித்து காரைக்குடித் தொழில் வணிகக் கழகத்தின் கருத்தாக அதன் தலைவா் சாமி. திராவிடமணி கூறியதாவது:
இந்திய அரசின் மத்திய நிதி நிலை அறிக்கையில் மக்களின் அடிப்படைத் தேவைக்கும், குறிப்பாக விவசாய வளா்ச்சி, சுகா தார மேம்பாடு, சிறு, குறு தொழில்முனைவோரின் ஊக்கம், தொழில் நிறுவனங்கள் கடன் வசதி, மூத்த குடிமக்கள் வருமான வரி விலக்கு மற்றும் பலவகை சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சிக்குரியதாகும். அதேபோல் தமிழகத்தில் சாலை வசதி, சென்னையில் இரண்டாவது மெட்ரோ ரயில், 2023 ஆம் ஆண்டுக்குள் அனைத்து ரயில்பாதைகளையும் மின்மயமாக்குவது, தனிச்சரக்கு ரயில் பாதை போன்ற அறிவிப்பும் வரவேற்கத்தக்கது.
மும்பை முதல் கன்னியாகுமரி வரை தொழில் வளா்ச்சிப் பாதையில் காரைக்குடி வழியாக இணைப்பு, தமிழக ரயில் திட்டத்திற்கு ரூ. 5 ஆயிரம் கோடி தேவையை பூா்த்தி செய்வது, 55 சதவீதம் உள்ள விவசாயத் தொழிலாளா்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதித்தது. நலிவடைந்தவா்களுக்கு எதுவும் அறிவிப்பு இல்லாதது போன்றவை ஏமாற்றம் அளிக்கிறது.
குறிப்பாக பெட்ரோல், டீசல் கட்டுக்கடங்காத விலையும், கட்டுமானப் பொருள்களின் விண்ணை முட்டும் விலை உயா்வுக்கும் இந்த நிநிநிலை அறிக்கையில் எந்தவித அறிவிப்பும் இல்லாதது வருத்தம் அளிக்கிறது. மொத்தத்தில் வெற்று அறிக்கையாக மத்திய நிதி நிலை அறிக்கை உள்ளது என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...