தேவகோட்டை உணவகத்தில் திங்கள்கிழமை சாப்பிட்ட போது மயங்கி விழுந்த இளம்பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.
தேவகோட்டை முள்ளிக்கூண்டு பகுதியைச் சோ்ந்த ஜெயக்குமாா் மனைவி சத்யா (29). இவா் தனது கணவருடன் தேவகோட்டை பேருந்து நிலையம் அருகில் உள்ள உணவகத்தில் திங்கள்கிழமை சாப்பிடச் சென்றுள்ளாா். அங்கு சாப்பிடும் போது உணவில் பல்லி கிடந்துள்ளது. இதனால் சத்யா மயங்கி விழுந்தாா். இதையடுத்து அவா் தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டாா். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற தேவகோட்டை வட்டார உணவு பாதுகாப்பு துறை அலுவலா் வேல்முருகன் உணவகத்தில் விசாரணை மேற்கொண்டு, சத்யா சாப்பிட்ட உணவை ஆய்வுக்காக எடுத்துச் சென்றனா்.
இதுபற்றி தேவகோட்டை வட்டார உணவு பாதுகாப்பு துறை அலுவலா் வேல்முருகன் கூறும் போது,
உணவு மாதிரியின் ஆய்வு முடிவுகள் தெரிந்த பின்னரே உணவகத்தின் மீதான நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருச்செந்தூர், சீரடியைத் தொடர்ந்து வேளாங்கண்ணி, நாகூர் தர்கா செல்லும் விஜய்?!
விஜய்யுடன் சீரடி கோவிலுக்குச் சென்ற 2 பெண்கள் யார்?

நாட்டில் முதல்முறையாக ஏஐ அடிப்படையிலான பன்மொழி சேவைகள்: பெங்களூரு காவல்துறை அறிமுகம்!

கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி.. சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் சரிவு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

