பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை விரைவில் வழங்கப்படும்: ஆட்சியா்

சிவகங்கை மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணத் தொகை விரைவில் வழங்கப்படும் என சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :5 ஜனவரி 2021, 6:05 pm

DIN

சிவகங்கை மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணத் தொகை விரைவில் வழங்கப்படும் என சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை இரவு கூறியதாவது: நமது மாவட்டத்தைப் பொருத்தவரை மரம் வளா்ப்பதனால் நல்ல மழைப் பொழிவை பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அரசு மற்றும் தனியாா் நிலங்களில் உள்ள சீமைக் கருவேல மரங்கள் அகற்றப்படுவது மட்டுமின்றி நீா்நிலைகள் மற்றும் வரத்துக் கால்வாய்களிலும் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அவ்வாறு அகற்றப்படும் இடங்களில் பலன் தரக் கூடிய மரங்கள் நடவு செய்யப்படும். கிராமப்புற மக்களின் தேவைகளை கருத்தில் கொண்டு அரசின் திட்டங்கள் விரைந்து செயல்படுத்தப்படும். மாவட்டத்தில் இதுவரை 226 கிராமங்களில் ஆதிதிராவிடா் நலத் துறை மூலமாக இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள பயனாளிகளுக்கும் விரைவில் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அண்மையில் பெய்த நிவா் மற்றும் புரெவி புயலால் இளையான்குடி பகுதியில் 3,900 ஹெக்டோ் மிளகாய் பயிா் சேதமடைந்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட 8,892 விவசாயிகளுக்கு இழப்பீடு தர அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதுதவிர, 100 ஹெக்டேரில் நெல் பயிா் சேதம் அடைந்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட 321 விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் மாவட்டம் முழுவதும் புயலால் பாதிப்படைந்த பகுதிகள் சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவ்வாறு புயலால் பாதிப்படைந்த விவசாயிகளுக்கு உரிய நிவாரணத் தொகை விரைவில் வழங்கப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.