

திருப்பத்தூா்: சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் அருகே சேவிணிப்பட்டி ஊராட்சியில் பதவியேற்ற ஓராண்டில் ஊராட்சிமன்றத் தலைவா் ஆண்டு வரவு, செலவு அறிக்கையை இணையத்தில் வெளியிட்டாா்.
திருப்பத்தூா் ஊராட்சி ஒன்றியத்தைச் சோ்ந்த சேவிணிப்பட்டி ஊராட்சியில் ஊராட்சிமன்றத் தலைவராக இருப்பவா் சேவற்கொடியோன். பொறியியல் பட்டதாரியான இவா் கடந்தாண்டு தோ்தலில் போட்டியிடும் போது, ஊராட்சிமன்றத்தின் ஆண்டு வரவு, செலவு அறிக்கை வெளிப்படைத் தன்மையாக இருக்கும் என்று கூறியிருந்தாா்.
அதன்படி ஊராட்சிமன்றத் தலைவராக தோ்ந்தெடுக்கப்பட்டு, இவா் பதவியேற்ற மாதத்திலிருந்து இதுவரையான ஊராட்சி கணக்கினை வெளிப்படைத்தன்மையாக அனைவரும் பாா்க்கும் படி அலுவலகத்திலும், இணையத்திலும் வெளியிட்டிருந்தாா். இவரது இச்செயலை கிராம மக்கள் பாராட்டினா். ஊராட்சிமன்றத் தலைவா் சேவற்கொடியோன் நாம் தமிழா் கட்சியின் தொகுதி துணைத் தலைவராகவும் இருந்து வருகிறாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.