மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் பங்குனித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்தேர்தல் பணிகளுக்காக கூடுதல் பணியிடங்கள் - அரசாணை வெளியீடுதிருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம்திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் தேரோட்டம்: துர்கா ஸ்டாலின் பங்கேற்பு!ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாள் சிலையை முதல்வர் திறந்துவைத்தார்ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!மார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியது
/

மானாமதுரையில் ரயில்வே தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

ரயில்வே தொழிலாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ்.ஆர்.இ.எஸ் சங்கத்தினர் மானாமதுரை ரயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

News image
மானாமதுரையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ரயில்வே தொழிலாளர்கள்.
Updated On :10 ஜூலை 2021, 12:52 pm

DIN

ரயில்வே தொழிலாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ்.ஆர்.இ.எஸ் சங்கத்தினர் மானாமதுரை ரயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். 
ரயில்வே துறையை தனியார் மயமாக்கக் கூடாது, ராணுவ தளவாட உற்பத்தி தொழிற்சாலைகளை கார்ப்பரேஷன்களாக மாற்றி தனியாரிடம் ஒப்படைக்கக் கூடாது, ஊழியர்களின் உற்பத்திப் பிரிவு பணிமனைகள் தனியாருக்கு கொடுக்க கூடாது, ரயில்வே தொழிலாளர்களுக்கு முடக்கப்பட்டுள்ள டி.ஏ வை உடனே வழங்க வேண்டும், புதிய தொழிலாளர் நலச் சட்டத்தை நடைமுறைப்படுத்த கூடாது, ரயில்வே விளையாட்டு மைதானங்கள் மற்றும் இடங்களை தனியாருக்கு கொடுக்கக் கூடாது, ரயில்வே தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தலை நடத்த உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
 எஸ்.ஆர்.இ.எஸ் மத்திய சங்க ஒருங்கிணைப்பு செயலாளர் ஜி ராஜாராம் ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் இந்த தொழிற்சங்கத்தின் மானாமதுரை கிளை நிர்வாகிகள் மதிவண்ணன், பாண்டியராஜன், மோகன், சந்தோஷ்குமார், கண்ணன், மாரி,கௌதம், ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.
 ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற ரயில்வே தொழிலாளர்கள் கோரிக்கையை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.