தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

மனைவியைத் தவறாகப் பேசிய தந்தை கொலை: மகன்கள் கைது

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே சனிக்கிழமை நள்ளிரவு தனது மனைவியை மதுபோதையில் தவறாகப் பேசிய தந்தையை அரிவாளால் வெட்டி கொலை செய்த இரு மகன்களை காவல் துறையினர் கைது செய்தனர்.

News image
Updated On :20 ஜூன் 2021, 5:02 am

DIN


மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே சனிக்கிழமை நள்ளிரவு தனது மனைவியை மதுபோதையில் தவறாகப் பேசிய தந்தையை அரிவாளால் வெட்டி கொலை செய்த இரு மகன்களை காவல் துறையினர் கைது செய்தனர்.

இளையான்குடி அருகே சிறுபாலை கிராமத்தைச் சேர்ந்தவர் மாணிக்கம் மகன் கணேசன்(57). இவர் அடிக்கடி மது போதையில் வீட்டிற்கு வந்து அங்கிருந்தவர்களிடம் தகராறு செய்து வந்துள்ளார்.

இந்நிலையில், வழக்கம்போல் மது அருந்திவிட்டு இரவு வீட்டுக்கு வந்த கணேசன் தனது மகன் பழனிச்சாமியின் மனைவியிடம் தகராறு செய்து அவரை தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த கணேசனின் இளைய மகன் பழனிச்சாமி (26) மற்றொரு மகன் கார்த்திகைசாமி இருவரும் சேர்ந்து கணேசனை அரிவாளால் கழுத்தில் வெட்டிக் கொலை செய்தனர்.

இளையான்குடி காவல் துறையினர் இந்த கொலைச் சம்பவம் குறித்து வழக்கு பதிந்து கார்த்திகைசாமி, பழனிச்சாமி இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.