எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில்  சசிகலாவுக்கு வரவேற்பு 

மதுரையிலிருந்து வெள்ளிக்கிழமை பசும்பொன் செல்லும் வழியில் சசிகலாவிற்கு மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக கட்சியினர் வரவேற்பளித்தனர்.

News image
மானாமதுரையில் சசிகலாவிற்கு அம முக தொண்டர்கள் பூர்ண கும்ப மரியாதையுடன் வரவேற்பளித்தனர்
Updated On :29 அக்டோபர் 2021, 6:09 am

DIN

மானாமதுரை: மதுரையிலிருந்து வெள்ளிக்கிழமை பசும்பொன் செல்லும் வழியில் சசிகலாவிற்கு மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக கட்சியினர் வரவேற்பளித்தனர்.

மதுரையில் கோரிப்பாளையத்தில் முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய சசிகலா பின்னர் தெப்பக்குளம் பகுதியில் உள்ள மருதுபாண்டியர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதன் பின்னர் அங்கிருந்து ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக சசிகலா பிரச்சார வாகனத்தில் புறப்பட்டு வந்தார். வழியில் மானாமதுரை பஸ் நிலையம் எதிரே சிவகங்கை மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பூரண கும்ப மரியாதையுடன் சசிகலாவிற்கு வரவேற்பளிக்கப்பட்டது. பிரச்சார வாகனத்தில் இருந்தவாறு தொண்டர்கள் வழங்கிய சால்வைகளை சசிகலா பெற்றுக் கொண்டார். பின் வழிநெடுகிலும் தொண்டர்கள் நின்று சசிகலாவை வரவேற்றனர்.

அதைத்தொடர்ந்து சசிகலா பசும்பொன் புறப்பட்டுச் சென்றார். அங்கு அவர் தேவர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். முன்னதாக திருப்புவனம், திருப்பாச்சேத்தி உள்ளிட்ட பகுதிகளிலும் தொண்டர்கள் சசிகலாவை வரவேற்றனர். மானாமதுரையில் நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் மானாமதுரை, இளையான்குடி மற்றும் மாவட்டம் முழுவதுமிருந்து வந்திருந்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகள் தொண்டர்கள், கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.