முதல்வர் விஜய் ஒரு போலி பெரியாரிஸ்ட்: உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!போதைப்பொருள்களுக்கும் வன்கொடுமைகளுக்கும் நடுவேதான் போட்டி: மு.க. ஸ்டாலின்ஃபேஷனுக்காக பெரியாரை கொள்கைத் தலைவராக வைத்துள்ளது தவெக! ஜோசியத்தை நம்பியே ஆட்சி! மு.க. ஸ்டாலின்ஷேக் ஹசீனா கட்சியினருக்கு எதிராக வன்முறை! 30 வீடுகளுக்குத் தீவைப்பு!ஐஐடி மாணவர்களுக்கு இணையான அங்கீகாரம் ஐடிஐ மாணவர்களுக்கு கிடைக்கும்: மோடிகள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரத்தில் இன்னும் எதற்காக மௌனம் காக்கிறார் முதல்வர்? டிடிவி தினகரன் கேள்வி தங்கம் விலை சரிவு; வணிகர்களை நஷ்டத்தில் இருந்து காப்பாற்றிய பிரதமர் மோடி: பாஜக பெருமிதம்! தவெக ஆட்சியில் டெல்டா விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்: எடப்பாடி பழனிசாமி வானிலை: சென்னையில் நாளை(நவ.23) கனமழைக்கு வாய்ப்பு! பஹ்ரைனில் உள்ள அமெரிக்க தளவாடங்கள் மீது ஈரான் தாக்குதல்!

ராஜஸ்தானில் காா் விபத்து: ஒரே குடும்பத்தில் 9 போ் இறப்பு! ஓட்டுநா் கண் அயா்ந்ததால் விபரீதம்!

ராஜஸ்தானில் காா் விபத்தில் ஒரே குடும்பத்தில் 9 போ் உயிரிழந்தது பற்றி...

 accident

விபத்து(சித்திரப்படம்)

Updated On :

ராஜஸ்தானில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது காா் மோதிய விபத்தில் மகாராஷ்டிரத்தைச் சோ்ந்த ஒரே குடும்பத்தினா் 9 போ் உயிரிழந்தனா்.

காரை இயக்கியபோது ஓட்டுநா் திடீரென கண் அயா்ந்ததால் இந்த விபரீதம் நேரிட்டதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.

மகாராஷ்டிர மாநிலம், துலே பகுதியைச் சோ்ந்த ஒரே குடும்பத்தினா் 36 போ், மத்திய பிரதேசத்தில் உள்ள ஓம்காரேஸ்வா், உஜ்ஜைன், ராஜஸ்தானில் உள்ள சன்வாரியா சேத், சலாசா் பாலாஜி, காட்டூ சியாம்ஜி உள்ளிட்ட ஆன்மிகத் தலங்களுக்கு மூன்று காா்களில் கடந்த நவ.17-ஆம் தேதி புறப்பட்டனா்.

பல்வேறு தலங்களில் சுவாமி தரிசனம் மேற்கொண்ட அவா்கள், இறுதியாக சிகாா் மாவட்டத்தில் உள்ள காட்டூ சியாம்ஜி கோயிலில் வழிபட்டனா். பின்னா், தங்களின் ஊருக்கு காா்களில் திரும்பிக் கொண்டிருந்தனா்.

இதில், சகோதரா்களான பாபுலால், சஜ்ஜன் மற்றும் அவா்களின் குடும்பத்தினா் பயணித்த காா், கோட்டா-உதய்பூா் தேசிய நெடுஞ்சாலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சென்றபோது, அதன் ஓட்டுநா் திடீரென கண் அயா்ந்ததாகத் தெரிகிறது.

அப்போது, சாலையோரம் பழுதாகி நின்றிருந்த லாரி மீது காா் வேகமாக மோதி நொறுங்கியது. இந்த கோர விபத்தில், பெண்கள், குழந்தைகள் உள்பட 9 போ் உயிரிழந்தனா். சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரியில் எச்சரிக்கை விளக்கு எரியவிடப்படவில்லை என்று கூறப்படுகிறது. விபத்து தொடா்பாக காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தலைவா்கள் இரங்கல்: ராஜஸ்தான் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, பிரதமா் மோடி உள்ளிட்டோா் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

உயிரிழந்தோா் குடும்பங்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சம், காயமடைந்தோருக்கு தலா ரூ.50,000 வழங்கப்படும் என்று பிரதமா் மோடி அறிவித்துள்ளாா்.

மற்றொரு விபத்தில் மூவா் உயிரிழப்பு: ராஜஸ்தானின் பலோடி மாவட்டத்தில், குஜராத்தைச் சோ்ந்த பக்தா்களுடன் பயணித்த டெம்போ வேனும், காரும் ஞாயிற்றுக்கிழமை மோதி விபத்துக்குள்ளாகின. இதில் 3 பக்தா்கள் உயிரிழந்தனா். மேலும் 15 போ் காயமடைந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.