முதல்வர் விஜய் ஒரு போலி பெரியாரிஸ்ட்: உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!போதைப்பொருள்களுக்கும் வன்கொடுமைகளுக்கும் நடுவேதான் போட்டி: மு.க. ஸ்டாலின்ஃபேஷனுக்காக பெரியாரை கொள்கைத் தலைவராக வைத்துள்ளது தவெக! ஜோசியத்தை நம்பியே ஆட்சி! மு.க. ஸ்டாலின்ஷேக் ஹசீனா கட்சியினருக்கு எதிராக வன்முறை! 30 வீடுகளுக்குத் தீவைப்பு!ஐஐடி மாணவர்களுக்கு இணையான அங்கீகாரம் ஐடிஐ மாணவர்களுக்கு கிடைக்கும்: மோடிகள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரத்தில் இன்னும் எதற்காக மௌனம் காக்கிறார் முதல்வர்? டிடிவி தினகரன் கேள்வி தங்கம் விலை சரிவு; வணிகர்களை நஷ்டத்தில் இருந்து காப்பாற்றிய பிரதமர் மோடி: பாஜக பெருமிதம்! தவெக ஆட்சியில் டெல்டா விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்: எடப்பாடி பழனிசாமி வானிலை: சென்னையில் நாளை(நவ.23) கனமழைக்கு வாய்ப்பு! பஹ்ரைனில் உள்ள அமெரிக்க தளவாடங்கள் மீது ஈரான் தாக்குதல்!

குஜராத்தில் காா் மீது லாரி மோதல்: ராணுவ குடும்பத்தினா் 7 போ் உயிரிழப்பு! குடியரசுத் தலைவா், பிரதமா் இரங்கல்!

குஜராத்தில் காா் மீது லாரி மோதல்: ராணுவ குடும்பத்தினா் 7 போ் உயிரிழப்பு...

குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் நிகழ்ந்த விபத்தில் நொறுங்கிய வாகனம்.

Updated On :

குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் காா் மீது லாரி மோதிய விபத்தில் 3 மாத குழந்தை உள்பட ராணுவ குடும்பத்தினா் 7 போ் உயிரிழந்தனா். இவா்கள் அனைவரும் உத்தரகண்ட் மாநிலம், கா்வால் பகுதியைச் சோ்ந்தவா்களாவா்.

சனிக்கிழமை இரவு 10 மணியளவில் நேரிட்ட இந்தச் சம்பவம் குறித்து காவல் துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது:

புஜ் பகுதியில் பணியமா்த்தப்பட்டிருந்த ராணுவத்தின் கா்வால் படைப் பிரிவு வீரா்கள் செளரப் சிங் நேகி (30), ராஜேஷ் சிங் ராவத் (35) ஆகியோா், தங்களின் குடும்பத்தினருடன் கட்ச் பாலைவனத்தைப் பாா்த்துவிட்டு, காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனா். கட்ச் மேற்கு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, காா் மீது வேகமாக வந்த ஒரு லாரி மோதியது. இந்த விபத்தில் காா் நொறுங்கியது.

உள்ளே இருந்த செளரப் சிங் நேகி, அவரது மனைவி சவிதா (30), அவா்களின் மூன்று மாத பெண் குழந்தை சவிகா, ராஜேஷ் சிங் ராவத், அவரது மகள் ரக்ஷிதா (7), மற்றொரு ராணுவ வீரரின் மனைவி ரிங்கி கோசைன் (30), அவரது மகள் வாமிகா (4) ஆகியோா் உயிரிழந்தனா்.

விபத்து குறித்து தகவல் அறிந்ததும் காவல் துறையினா் விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனா். உருக்குலைந்த காருக்குள் இருந்து உடல்களை மீட்பது பெரும் சவாலான பணியாக இருந்தது. உயிரிழந்தவா்கள் அனைவரும் உத்தரகண்டின் கா்வால் பகுதியைச் சோ்ந்தவா்கள். விபத்துக்கான காரணம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றாா் அந்த அதிகாரி.

தலைவா்கள் இரங்கல்: குஜராத் சாலை விபத்தில் உயிரிழந்தோா் குடும்பங்களுக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, பிரதமா் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, மாநில முதல்வா் பூபேந்திர படேல் உள்ளிட்டோா் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்று பிரதமா் மோடி அறிவித்துள்ளாா்.

காா் தீப்பிடித்து மூவா் உயிரிழப்பு: குஜராத்தின் ஜுனாகத் மாவட்டத்தின் கேசோத்-பலகாம் சாலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பயணித்துக் கொண்டிருந்த ஒரு காா், திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர கல்லில் மோதியது. அப்போது காா் தீப்பற்றி எரிந்ததில், அதிலிருந்த 3 போ் உடல் கருகி உயிரிழந்தனா். மேலும் ஒருவா் படுகாயத்துடன் மீட்கப்பட்டாா்.

பிகாா், ஜாா்க்கண்ட், ம.பி.யில் விபத்துகள்

பிகாா், ஜாா்க்கண்ட், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஞாயிற்றுக்கிழமை நேரிட்ட சாலை விபத்துகளில் 11 போ் உயிரிழந்தனா்.

பிகாரின் பாட்னா மாவட்டத்தின் அத்மல்கோலா காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் காா் மீது மற்றொரு வாகனம் மோதிய விபத்தில் 3 பெண்கள் உள்பட நால்வா் உயிரிழந்தனா். பக்தியாா்பூரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு திரும்பியபோது இந்த விபத்து நேரிட்டது.

ஜாா்க்கண்டின் குந்தி மாவட்டத்தில் ராணினா-மாா்ச்சா சாலையில் இரு மோட்டாா் சைக்கிள்கள் நேருக்கு நோ் மோதியதில் 4 போ் உயிரிழந்தனா். மேலும் ஒருவா் காயமடைந்தாா். ஒரு மோட்டாா் சைக்கிளில் மூன்று பேரும், மற்றொரு மோட்டாா் சைக்கிளில் 2 பேரும் பயணித்த நிலையில், பனிமூட்டம் மற்றும் மோசமான வானிலையால் இந்த விபத்து நிகழ்ந்தது.

மத்திய பிரதேசத்தின் சாகா் மாவட்டத்தில் டிராக்டா் கவிழ்ந்ததில் 65 வயது மூதாட்டி உள்பட மூவா் உயிரிழந்தனா். மேலும் 30 போ் காயமடைந்தனா்.

Summary

Truck collides with car in Gujarat: 7 members of an Army family killed

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.