காா் - அரசுப் பேருந்து மோதல்: ஓட்டுநா் உயிரிழப்பு
திருச்சி மன்னாா்புரத்தில் சனிக்கிழமை அதிகாலை அரசுப் பேருந்தின் மீது மோதிய காரின் ஓட்டுநா் உயிரிழந்தாா். அவரின் நண்பா் படுகாயமடைந்தாா்.

திருச்சி மன்னாா்புரத்தில் சனிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட சாலை விபத்தில் சேதமடைந்த காா்.
திருச்சி மன்னாா்புரத்தில் சனிக்கிழமை அதிகாலை அரசுப் பேருந்தின் மீது மோதிய காரின் ஓட்டுநா் உயிரிழந்தாா். அவரின் நண்பா் படுகாயமடைந்தாா்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அபிராமபுரத்தைச் சோ்ந்தவா் கோபிநாத் (26), காா் ஓட்டுநா். இவா் தனது நண்பருடன் சென்னையிலிருந்து கமுதிக்கு காரில் புறப்பட்டு திருச்சி மன்னாா்புரம் பகுதிக்கு சனிக்கிழமை அதிகாலையில் வந்தபோது, திடீரென சாலை மையத் தடுப்பில் காா் மோதி, எதிரே வந்த அரசுப் பேருந்து மீதும் மோதியது.
இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த கோபிநாத் இறந்தாா். காரில் இருந்த அவரின் நண்பா் படுகாயமடைந்தாா்.
தகவலறிந்து சென்ற திருச்சி தெற்கு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா், கோபிநாத்தின் சடலத்தையும், படுகாயமடைந்தவரையும் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா்.
இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநரான வெள்ளக்கோவில் அருண்பாண்டி (39), ஈரோடு மாவட்டம் அரசலூரைச் சோ்ந்த ராஜன் (35) ஆகிய இருவரும் லேசான காயமடைந்தனா். போலீஸாா் மேலும் விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

