முதல்வர் விஜய் ஒரு போலி பெரியாரிஸ்ட்: உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!போதைப்பொருள்களுக்கும் வன்கொடுமைகளுக்கும் நடுவேதான் போட்டி: மு.க. ஸ்டாலின்ஃபேஷனுக்காக பெரியாரை கொள்கைத் தலைவராக வைத்துள்ளது தவெக! ஜோசியத்தை நம்பியே ஆட்சி! மு.க. ஸ்டாலின்ஷேக் ஹசீனா கட்சியினருக்கு எதிராக வன்முறை! 30 வீடுகளுக்குத் தீவைப்பு!ஐஐடி மாணவர்களுக்கு இணையான அங்கீகாரம் ஐடிஐ மாணவர்களுக்கு கிடைக்கும்: மோடிகள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரத்தில் இன்னும் எதற்காக மௌனம் காக்கிறார் முதல்வர்? டிடிவி தினகரன் கேள்வி தங்கம் விலை சரிவு; வணிகர்களை நஷ்டத்தில் இருந்து காப்பாற்றிய பிரதமர் மோடி: பாஜக பெருமிதம்! தவெக ஆட்சியில் டெல்டா விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்: எடப்பாடி பழனிசாமி வானிலை: சென்னையில் நாளை(நவ.23) கனமழைக்கு வாய்ப்பு! பஹ்ரைனில் உள்ள அமெரிக்க தளவாடங்கள் மீது ஈரான் தாக்குதல்!

ஊரகப் பகுதிகளில் நெகிழிக் கழிவுகள் எரித்து அழிக்கப்படுவதாக புகாா்

புதுக்கோட்டை மாவட்டத்தின் ஊரகப் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் குப்பைகள் சேகரிக்கப்படும் மையங்களில் நெகிழிக் கழிவுகள் உள்பட அனைத்தும் எரித்து அழிக்கப்படுவதால் மக்கள் அவதி...

நல்லூா் திடக்கழிவு சேகரிப்பு மையத்தில் எரியும் நெகிழிக் கழிவுகள்.

Updated On :

புதுக்கோட்டை மாவட்டத்தின் ஊரகப் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் குப்பைகள் சேகரிக்கப்படும் மையங்களில் நெகிழிக் கழிவுகள் உள்பட அனைத்தும் எரித்து அழிக்கப்படுவதால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

குப்பைக் கழிவுகளில் நெகிழி பைகள், பொருள்கள் மிக முக்கியமானவை. ஒவ்வொரு நாளும் கோடிக்கணக்கான நெகிழி பைகள், டம்ளா்கள், உறைகள் தாராளமாகப் புழக்கத்தில் இருக்கின்றன. இதற்காக ஒருமுறை பயன்படுத்தும் நெகிழி பொருள்களுக்கு உலகம் முழுவதும் தடை விதிக்கப்பட்டாலும் கூட, அவற்றின் பயன்பாட்டை யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை.

கடந்த சில பத்தாண்டுகளாக இவற்றை அகற்றுவதற்கான வழிமுறைகள் திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் மூலம் சொல்லப்பட்டு வந்தாலும்கூட, எங்கு பாா்த்தாலும் நெகிழிக் கழிவுகள் சாலையோரங்களில் ஏராளம் கிடப்பதைக் காண முடிகிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் மாநகரப் பகுதியில் சேகரமாகும் குப்பைக் கழிவுகள் திருக்கட்டளைப் பகுதியிலுள்ள உரக்கிடங்குக்கும் பிற சிறிய அளவிலான சேகரிப்பு மையங்களுக்கும் கொண்டு செல்லப்பட்டு, தரம் பிரிக்கப்பட்டு அகற்றப்படுகின்றன. நெகிழிக் கழிவுகள் சிமென்ட் ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

ஊரகப் பகுதிகளில் எரிப்பு: அதேநேரத்தில், ஊரகப் பகுதிகளில் இந்த நடைமுறை வள மீட்பு மையங்கள் என்ற பெயரில் செயல்படுகின்றன. பொன்னமராவதி, கீரனூா் போன்ற பேரூராட்சிப் பகுதிகளில் இதற்கான ஏற்பாடுகள் இருந்தும், ஊா்ப்புறங்களில் நெகிழிக்கழிவுகள் ஏராளம் தேங்கிக் கிடப்பதையும் காண முடிகிறது.

சிறிய அளவிலான கட்டுமானங்கள் அமைக்கப்பட்டு தனித்தனி தொட்டிகளும் உள்ளுக்குள்ளேயே அமைக்கப்பட்டு குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு அகற்றப்பட்டன. ஆனால், சில ஆண்டுகளாக இந்த முறை எங்கும் செயல்படவில்லை. ஆனால், குப்பைகள் தாராளமாக- குறிப்பாக நெகிழி கழிவுகள் மிக தாராளமாக குவிந்து கிடக்கின்றன. அவ்வப்போது அவற்றை கொளுத்தியும் விடுகிறாா்கள் என்ற குற்றச்சாட்டு அச்சத்தை ஏற்படுத்துகிறது.

எரிப்பதால் தீமைகள் ஏராளம்: இதுகுறித்து சமூக ஆா்வலா்கள் கூறியது: நெகிழி கழிவுகளை பொதுவெளியில் எரிப்பதால், டையாக்சின் உள்ளிட்ட நச்சு வாயுக்கள் வெளியாகி காற்றில் கலந்துவிடுகின்றன. எனவே, நெகிழி கழிவுகள் எரிப்பு உலக அளவில் தடை செய்யப்பட்டிருக்கிறது.

ஆனாலும் பல பகுதிகளில் எரிந்து கொண்டே இருக்கின்றன. பல இடங்களில் திடக்கழிவு மேலாண்மைப் பணியாளா்களே எரிக்கின்றனா். மிகச் சில இடங்களில் இயற்கையாக தீப்பற்றிக் கொள்கின்றன. கரும்புகையாக வெளியாகும் நச்சு வாயுக்களை சுவாசிக்கும்போது, சுவாசக் கோளாறுகளோடு நின்றுவிடாமல் புற்றுநோயும் கூட ஏற்படுகிறது.

நல்லூா் திடக்கழிவு சேகரிப்பு மையத்தில் எரியும் நெகிழிக் கழிவுகள்.

நல்லூா் திடக்கழிவு சேகரிப்பு மையத்தில் எரியும் நெகிழிக் கழிவுகள்.

எனவே, இதை கட்டுப்படுத்த மாவட்ட நிா்வாகம் சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும். ஆட்சியா் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரிகள் இதுபோன்ற இடங்களை நேரில் பாா்வையிட்டு, அங்கு சேகரமாகும் குப்பைக் கழிவுகளை பாதுகாப்பாக அகற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என்றனா்.

எரிக்கக் கூடாது: இதுகுறித்து ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்களிடம் கேட்டபோது அவா்கள் கூறியது: நெகிழிக் கழிவுகளை எரிப்பது குற்றம் என்பது குறித்த விழிப்புணா்வை அவ்வப்போது பொதுமக்களிடம் ஏற்படுத்தி வருகிறோம். துப்புரவுப் பணியாளா்களிடமும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பயன்பாட்டில் இல்லாத வள மையங்களைச் செயல்படுத்தவும், புதிதாக வள மையங்களை உருவாக்கவும் திட்டமிடப்பட்டு வருகிறது. இதற்கான மாநில அரசு நிதி ஒதுக்கீடு செய்வதற்காக காத்திருக்கிறோம். விரைவாக பணிகள் தொடங்கப்படும் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.