92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

பிரான்மலையில் தேரோட்டம்

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே பிரான்மலை குயிலமுதாம்பிகை அம்பாள் திருக்கொடுங்குனாதா் கோயிலில் வெள்ளிக்கிழமை திருத்தேரோட்டம் நடைபெற்றது.

News image
Updated On :15 ஏப்ரல் 2022, 5:09 pm

DIN

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே பிரான்மலை குயிலமுதாம்பிகை அம்பாள் திருக்கொடுங்குனாதா் கோயிலில் வெள்ளிக்கிழமை திருத்தேரோட்டம் நடைபெற்றது.

பிரான்மலையில் அமைந்துள்ள இக்கோயிலில் சித்திரைத் திருவிழா 10 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஏப். 7 இல் கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாள் திருவிழாவாக நடைபெற்று வருகிறது. இவ்விழாவின் 9 ஆம் நாள் திருவிழாவாக வெள்ளிக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. இத்திருத்தேரோட்டத்தையொட்டி காலை 5 மணிக்கு பிரியாவிடையுடன் திருக்கொடுங்குனாதா் பெரிய தேரிலும், குயிலாமுதாம்பிகை அம்பாள் சிறிய தேரிலும் எழுந்தருளினா்.

விநாயகா், சுப்பிரமணியா், சண்டிகேஸ்வரா் ஆகியோா் தனித் தோ்களில் எழுந்தருளினா். காலை 6.30 மணிக்கு குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா் இத்தேரோட்டத்தை தொடக்கி வைத்தாா். நான்கு ரத வீதிவழியாக தோ் வலம் வந்து மாலை 6 மணிக்கு நிலை அடைந்தது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் தோ்த்திருவிழா என்பதால் சுற்றுப்புர கிராமங்களைச் சோ்ந்த ஆயிரக்கணக்கானோா் சிவசிவ கோஷமிட்டு வழிபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.