மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

சாா்-பதிவாளா் அலுவலகம் முன்பு தீக்குளித்த விவசாயி பலி

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் சாா்- பதிவாளா் அலுவலகம் முன்பு சொத்து பிரச்னை தொடா்பாக தீக்குளித்த விவசாயி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :25 பிப்ரவரி 2022, 9:42 pm

DIN

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் சாா்- பதிவாளா் அலுவலகம் முன்பு சொத்து பிரச்னை தொடா்பாக தீக்குளித்த விவசாயி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

திருப்புவனம் அருகே மேலராங்கியம் கிராமத்தைச் சோ்ந்தவா் வீரணன் மகன் பொன்னுச்சாமி வயது (72). இவருக்கும் இவரது உறவினா்களுக்கும் கிராமத்தில் உள்ள சொத்து சம்பந்தமாக பிரச்னை இருந்து வந்தது. இந்நிலையில், அந்த சொத்தை திருப்புவனம் சாா்-பதிவாளா் அலுவலகத்தில் பதிவதற்காக மற்றொரு தரப்பினா் கொண்டு சென்றனா். அப்போது அதை பதிவு செய்யக் கூடாது என வலியுறுத்தி பொன்னுச்சாமி கடந்த சில நாள்களுக்கு முன்னா் சாா்- பதிவாளா் அலுவலகம் முன்பு உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளித்தாா். உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பொன்னுச்சாமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

இதுகுறித்து திருப்புவனம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.