அப்போது தஞ்சாக்கூரைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் விரதம் தொடங்கி சுப்ரமணியர் கோயிலில் முளைப்பாரி வளர்த்தனர். விழா நாட்களில் தினமும் சுப்பிரமணியருக்கும் முளைப்பாரிச் சட்டிகளுக்கும் சிறப்பு பூஜைகள் நடந்து வந்தது. மண்டலாபிஷேக விழா நிறைவாக சுப்பிரமணியர், ஜெயம் பெருமாள், ஜெகதீஸ்வரர் கோயிலில் புனித நீர் கலசங்கள் வைத்து யாகம் வளர்க்கப்பட்டது. யாகத்தின் நிறைவாக பூர்ணாஹுதி முடிந்து இக்கோயில்களில் உள்ள மூலவர்களுக்கும் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் அபிஷேகம் நடத்தி சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள் தீபாராதனைகள் நடைபெற்றன. சுப்பிரமணியர் கோயில் தெப்பக்குளத்தில் ஒன்றாக அமைந்துள்ள ராகு, கேது தெய்வங்களுக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தது.