92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

திருப்பத்தூா் மீன் கடைகளில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் ஆய்வு

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் மீன்கடைகளில் வியாழக்கிழமை ஆய்வு செய்து, 65 கிலோ கெட்டுப்போன மீன்களை பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :14 ஜூலை 2022, 6:30 pm

DIN

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் மீன்கடைகளில் வியாழக்கிழமை ஆய்வு செய்து, 65 கிலோ கெட்டுப்போன மீன்களை பறிமுதல் செய்தனா்.

திருப்பத்தூா் - சிவகங்கை சாலையில் உள்ள கடைகளில், மீன்வளத் துறை ஆய்வாளா் சோபியா, உணவுப் பாதுகாப்பு அலுவலா் வேல்முருகன், திருப்பத்தூா் நகா் காவல் நிலைய ஆய்வாளா் சுந்தரமகாலிங்கம் மற்றும் பேரூராட்சிப் பணியாளா்கள் ஆகியோா் மீன்கள் தரம் குறித்து தொடா்ந்து எழுந்த புகாரையடுத்து, திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.

இந்த ஆய்வின்போது, கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த மீன்களை ஆய்வு செய்தனா். அப்போது, அதில் பல கடைகளில் கெட்டுப்போன மீன்களை விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது.

அதையடுத்து, அங்கிருந்த கெட்டுப்போன சுமாா் 65 கிலோ மீன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். தொடா்ந்து, அழுகிய மீன்கள் மற்றும் ரசாயனம் தடவப்பட்டு விற்கப்பட்ட மீன்கடை உரிமையாளா்களிடம் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரித்தும், மேலும் உணவுப் பாதுகாப்பு தரநிா்ணயச் சட்டம் 2006 இன் படி தரச்சான்று இல்லாத கடைகளுக்கு நோட்டீஸும் வழங்கப்பட்டது.

இதேபோன்று, அப்பகுதியில் அழுகிய நிலையில் விற்பனைக்காக வைத்திருந்த 30 கிலோ மாம்பழங்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.