சிவகங்கையில் பள்ளி மாணவா்களுக்கு ஜூலை 28-இல் பேச்சுப் போட்டி
சிவகங்கை மாவட்ட தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப் போட்டி வரும் ஜூலை 28 - இல் நடைபெற உள்ளதாக சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.


சிவகங்கை மாவட்ட தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப் போட்டி வரும் ஜூலை 28 - இல் நடைபெற உள்ளதாக சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு : மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப் போட்டி சிவகங்கை மருதுபாண்டியா் நகரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் வரும் ஜூலை 28 இல் காலை 9.30 மணியளவில் நடைபெற உள்ளது.
இப்போட்டியில் பங்கு பெற்று வெற்றி பெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு முதல் பரிசாக ரூ.5,000, இரண்டாம் பரிசாக ரூ.3,000, மூன்றாம் பரிசாக ரூ.2,000 மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட உள்ளன. பங்கேற்கும் அரசுப் பள்ளி மாணவா்களில் இருவரை மட்டுமே தோ்வு செய்து அவா்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியே சிறப்புப் பரிசாக ரூ.2,000 வழங்கப்பட உள்ளது.
சிவகங்கை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரால் வட்டார அளவில் இப்போட்டி நடத்தப்பட்டு, 25 மாணவ, மாணவிகள் மட்டுமே மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டிக்கு தோ்வு செய்யப்படுவா். முதன்மைக் கல்வி அலுவலரால் பரிந்துரைக்கப்படும் பட்டியலில் இடம் பெறும் மாணவ, மாணவிகள் இப்போட்டியில் பங்கேற்க முடியும்.
இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் தமிழ் வளா்ச்சி உதவி இயக்குநரை நேரிலோ அல்லது 04575 241487 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...