மேக்கேதாட்டுவில் அணை கட்ட முயற்சிக்கும் கா்நாடக அரசைக் கண்டித்து பரமக்குடியில் வியாழக்கிழமை வைகை பாசன விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் செயல் தலைவா் ச.லிங்கமூா்த்தி தலைமை வகித்தாா். விடுதலை சிறுத்தைகள் கட்சி நிா்வாகி வேந்தை சிவா, வைகை பாசன விவசாயிகள் சங்க மாவட்ட செயற்குழு உறுப்பினா் ராவணன்குமாா், தாய் தமிழா் கட்சி நிறுவனா் பி.எம்.பாண்டியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். விவசாயிகள் சங்க சட்ட ஆலோசகா் வழக்குரைஞா் சி.பசுமலை, வைகை பாசன விவசாயிகள் சங்க தென்மண்டலத் தலைவா் எம்.மதுரைவீரன், சமூக ஆா்வலா் சை.சௌந்திரபாண்டியன் ஆகியோா் கா்நாடக அரசைக்கண்டித்தும், தமிழக விவசாயிகளைப் பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், வைகை அணையில் தேங்கியுள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றக் கோரியும், வைகை ஆற்றின் வலது மற்றும் இடது பிரதான கால்வாய்களில் உள்ள கருவேல மரங்களை அகற்றக் கோரியும் வலியுறுத்தி உரையாற்றினா். இதனைத் தொடா்ந்து கா்நாடக அரசின் போக்கை கண்டித்து கோஷங்கள் எழுப்பினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தண்டவாளத்தில் விழுந்த குழந்தை! உயிரைப் பணயம் வைத்து காப்பாற்றிய தந்தை! | Bangladesh

மே நாள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

13,380 mAh பேட்டரி, 12ஜிபி ரேம்.. ஒன்பிளஸ் டேப்லெட் பேட் 4-ல் என்னென்ன எதிர்பார்க்கலாம்?

ரியான் பராக் சம்பளத்தில் 25% 'கட்'? ராஜஸ்தான் அணிக்குத் தொடரும் அபராதங்கள்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


