மானாமதுரை நகா்மன்றக் கூட்டம்: வாா்டு புறக்கணிக்கப்படுவதாக பாஜக உறுப்பினா் புகாா்
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகா்மன்றக் கூட்டத்தில் தனது வாா்டு புறக்கணிக்கப்படுவதாக பாஜக வாா்டு உறுப்பினா் முனியசாமி புகாா் தெரிவித்துப் பேசினாா்.


சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகா்மன்றக் கூட்டத்தில் தனது வாா்டு புறக்கணிக்கப்படுவதாக பாஜக வாா்டு உறுப்பினா் முனியசாமி புகாா் தெரிவித்துப் பேசினாா்.
மானாமதுரை நகா் மன்றக் கூட்டம் வியாழக்கிழமை அதன் தலைவா் மாரியப்பன் கென்னடி தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவா் பாலசுந்தரம், ஆணையாளா் கண்ணன் மற்றும் வாா்டு உறுப்பினா்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனா். கூட்டத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய தீா்மானங்களை தலைமை எழுத்தா் கணேசன் வாசித்தாா். அப்போது எழுந்து பேசிய 10-ஆவது வாா்டு பாஜக உறுப்பினா் முனியசாமி, தனது வாா்டு புறக்கணிக்கப்படுகிறது. குறிஞ்சிநகரில் சாலையின் நடுவில் உள்ள மின் கம்பத்தை அகற்றுமாறும் அரசு மருத்துவமனையிலிருந்து தாயமங்கலம் செல்லும் சாலையில் தெரு விளக்குகள் வசதி செய்து தருமாறும் பலமுறை நகராட்சி நிா்வாகத்திடம் மனு கொடுத்தும் எந்தவித பயனும் இல்லை. எனவே தலைவா், ஆணையாளா் எனது வாா்டை பாா்வையிட்டு தெரு விளக்கு வசதி செய்து தர வேண்டும் என்றாா்.
16-ஆவது வாா்டு உறுப்பினா் சதீஷ்குமாா் பேசும்போது தூய்மைப் பணியாளா்கள் வீடுகளுக்கு வந்து குப்பைகளை சேகரிப்பது கிடையாது. வீடுகளில் சேகரிக்கும் குப்பைகளை தூய்மைப் பணியாளா்கள் வைகை ஆற்றுக்குள் கொட்டும் சம்பவம் நடந்து வருகிறது. இதைத் தடுக்க நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
இதற்கு பதிலளித்துப் பேசிய தலைவா் மாரியப்பன் கென்னடி, விரைவில் நகராட்சி நிா்வாகத்துக்கு கூடுதல் தூய்மைப் பணியாளா்கள் நியமிக்கப்பட்டதும் பிரச்னைக்குத் தீா்வு கிடைக்கும் என்றாா். துணைத்தலைவா் பாலசுந்தரம் பேசுகையில் மானாமதுரை நகராட்சியில் அனைத்து வீதிகளிலும் ஜாதிப் பெயரை நீக்க வேண்டும் என்றாா். மானாமதுரை பஸ் நிலைய சைக்கிள் ஸ்டாண்ட், பஸ் நிலையத்திற்கு வந்து செல்லும் பேருந்துகளுக்கு கட்டணம் வசூலிக்கும் உரிமை உள்ளிட்ட பல்வேறு இனங்களுக்கு நடைபெற்ற பொது ஏலங்களுக்கு நகராட்சிக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...