போராட்டங்களில் காவல்துறை அத்துமீறலை நியாப்படுத்த முடியாது! தலைமை நீதிபதி கண்டனம்!மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை! சிஜேபி எச்சரிக்கைமக்களவையில் கடும் அமளிக்கு இடையே தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா தாக்கல்!எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி அம்மன் கோயிலில் கொடியேற்றம்

நாட்டரசன்கோட்டையில் உள்ள கண்ணுடைய நாயகி அம்மன் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம் சனிக்கிழமை நடைபெற்றது.

News image

சிவகங்கை அருகே நாட்டரசன்கோட்டையில் உள்ள கண்ணுடைய நாயகி அம்மன் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு சனிக்கிழமை நடைபெற்ற கொடியேற்றம்.

Updated On :4 ஜூன் 2022, 4:16 pm IST

சிவகங்கை: நாட்டரசன்கோட்டையில் உள்ள கண்ணுடைய நாயகி அம்மன் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம் சனிக்கிழமை நடைபெற்றது.

சிவகங்கை தேவஸ்தானத்துக்குள்பட்ட நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகியம்மன் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்த விழா சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இவ்விழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.பின்னர் விஷேச தீப, தூபங்கள் காண்பிக்கப்பட்டன.

அதைத் தொடர்ந்து, கோயில் முன்பு உள்ள கொடிமரத்துக்கு தைலம், திருமஞ்சனம், பால், தயிர், இளநீர், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான வாசனைப் பொருள்களால் அபிஷேகங்கள் நடைபெற்றன. அதன்பின் சிறப்பு பூஜைகளுடன் கொடியேற்றம் நடைபெற்றது.

சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய கண்ணுடைய நாயகியம்மன்.

சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய கண்ணுடைய நாயகியம்மன்.

ஜூன் 4 முதல் ஜூன் 14 வரை தினசரி காலை, மாலை ஆகிய இரு வேளைகளிலும் கண்ணுடையநாயகி அம்மன் வெள்ளி கேடயம், சிம்மம், காமதேனு, யானை, பூதம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா நடைபெறும். ஜூன் 10 ஆம் தேதி மாலையில் கோயில் உள்பிரகாரத்தில் தங்க ரதத்தில் அம்மன் எழுந்தருளி பவனி வரும் நிகழ்ச்சி நடைபெறும்.

ஜூன் 11 ஆம் தேதி சனிக்கிழமை வெள்ளி ரத விழாவும், ஜூன் 12 ஆம் தேதி காலை 9 மணிக்கு தேரோட்டமும் நடைபெறும். அன்று இரவு புஷ்ப பல்லக்கு நிகழ்ச்சி நடைபெறற உள்ளது. ஜூன் 13 ஆம் தேதி காலை 10.30 மணிக்கு பூக்குழி இறங்குதல் நிகழ்ச்சியும், அன்று இரவு புஷ்பப் பல்லக்கில் கண்ணுடைய நாயகி அம்மன் எழுந்தருளி வீதி உலா வருதலும் நடைபெறும். ஜூன் 14 ஆம் தேதி உற்ஸவ சாந்தியுடன் விழா நிறைவு பெறும்.

இவ்விழாவில் நாட்டரசன்கோட்டை, சிவகங்கை, கல்லல் ஆகிய பகுதிகளிலிருந்தும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்தும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை சிவகங்கை தேவஸ்தானத்தின் பரம்பரை அறங்காவலர் டி.எஸ்.கே.மதுராந்தகி நாச்சியார் உத்தரவின் பேரில் தேவஸ்தான மேலாளர் பா.இளங்கோ, கோயில் சரக கண்காணிப்பாளர் பி.சரவண கணேசன் ஆகியோர் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.