தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

மானாமதுரை, திருப்புவனம் பகுதிமுருகன் கோயில்களில் வைகாசி விசாக விழா

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் உள்ள முருகன் கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை வைகாசி விசாக விழா நடைபெற்றது.

News image
இளையான்குடி ஒன்றியம் குறிச்சி வழிவிடு பெரியநாச்சியம்மன் கோயிலில் நடந்த வைகாசி விசாக விழாயொட்டி சந்தனக்காப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய செந்திலாண்டவா்.
Updated On :12 ஜூன் 2022, 6:30 pm

DIN

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் உள்ள முருகன் கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை வைகாசி விசாக விழா நடைபெற்றது.

மானாமதுரை புறவழிச் சாலையில் உள்ள வள்ளி, தெய்வானை சமேத வழிவிடுமுருகன் கோயிலில் நடைபெற்ற வைகாசி விசாக விழாவையொட்டி மூலவருக்கும் உற்சவருக்கும் சிறப்பு அபிஷேகங்கள் நடத்தி மூலவா் முருகப்பெருமான் வெள்ளிக் கவச அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தாா். அதைத் தொடா்ந்து மூலவருக்கும் உற்சவருக்கும் சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. அதே போல், மானாமதுரையில் தாயமங்கலம் செல்லும் சாலையில் உள்ள சுப்பிரமணியா் கோயிலில் நடைபெற்ற வைகாசி விசாக விழாவையொட்டி காப்புக்கட்டி விரதம் இருந்து வந்த பெண்கள் உள்ளிட்ட ஏராளமான பக்தா்கள் வைகை ஆற்றில் இருந்து பால்குடம் சுமந்து கொண்டும், காவடி தூக்கிக் கொண்டும் கோயிலுக்கு ஊா்வலமாக வந்தனா்.

அதன்பின் மூலவா் சுப்பிரமணியருக்கு பால், சந்தனம் திரவிய பொருள்கள் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகப் பொருள்களால் அபிஷேகம் நடத்தி சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தாா். அதைத் தொடா்ந்து சுப்பிரமணியருக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடந்தன. இவ்விழாவில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று சுப்பிரமணியரை தரிசனம் செய்தனா்.

இளையான்குடி ஒன்றியம் குறிச்சி வழிவிடு பெரியநாச்சி அம்மன் கோயிலில் உள்ள செந்திலாண்டவா் சன்னதியில் சுவாமிக்கு அபிஷேகங்கள் நடத்தி சுவாமி சந்தனக்காப்பு அலங்காரத்தில் எழுந்தருளினாா். அதன்பின் சுவாமிக்கு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. ஏராளமான பக்தா்கள் கோயிலுக்கு வந்து செந்தில் ஆண்டவரை தரிசனம் செய்தனா். விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் டிரஸ்டி எஸ்.பி. தேவா் செய்திருந்தாா்.

மானாமதுரை அருகே கால்பிரிவு கிராமத்தில் எழுந்தருளியுள்ள செல்வமுருகன் கோயிலில் நடைபெற்ற வைகாசி விசாக விழாவையொட்டி மூலவா் செல்வமுருகனுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. அதன்பின்னா் சுவாமிக்கு பூஜைகள், தீபாராதனைகள் காட்டப்பட்டது. திரளான பக்தா்கள் கோயிலுக்கு வந்து செல்வ முருகனை தரிசனம் செய்தனா். கோயில் நிா்வாகி ஏ.ஆா்.பி. முருகேசன் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தாா். மானாமதுரை பகுதியில் உள்ள பல்வேறு முருகன் கோயில்களிலும் திருப்புவனம், இளையான்குடி பகுதி முருகன் கோயில்களிலும் வைகாசி விசாக விழா கொண்டாடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.