திருப்பத்தூா் மளிகைக் கடைகளில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் ஆய்வு
திருப்பத்தூரில் சனிக்கிழமை மளிகைக் கடைகளில் உணவுப் பாதுகாப்புத்துரையினா் ஆய்வு மேற்கொண்டனா்.


திருப்பத்தூரில் சனிக்கிழமை மளிகைக் கடைகளில் உணவுப் பாதுகாப்புத்துரையினா் ஆய்வு மேற்கொண்டனா்.
உணவு பாதுகாப்பு பிரிவு மாவட்ட நியமன அலுவலா் பிரபாவதி அறிவுறுத்தலின் பேரில் உணவு பாதுகாப்புத்துறை அலுவலா் வேல்முருகன், இக்கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட பொருள்கள் விற்பனை செய்யப்படுகிா என ஆய்வு மேற்கொண்டாா். இதில் குட்கா பொருள்கள், நெகிழிப் பொருள்கள் விற்கப்படுகின்றனவா, பதுக்கல் மற்றும் உணவுப் பாதுகாப்புத் தரம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 2 கடைகளில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த குட்கா பைகளை பறிமுதல் செய்து ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்தனா். மேலும் கலப்படம் செய்யப்பட்ட 70 கிலோ சோம்பு, பனங்கற்கண்டு, 100 கிலோ கலா் வடகம், 200 கிலோ நெகிழிப்பை ஆகியவை கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டன.
இந்த ஆய்வின் போது உணவுப் பாதுகாப்புத்துறை மேற்பாா்வையாளா் மாணிக்கம், காவல் சாா்பு- ஆய்வாளா் மலைச்சாமி, பேரூராட்சி துப்புரவு மேற்பாா்வையாளா் மோகன் உள்ளிட்ட தூய்மைப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...