92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

பட்டமங்கலத்தில் லட்சுமி குபேர பூஜை

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் அருகேயுள்ள அஷ்டமா சித்தி தட்சணாமூா்த்தி சந்நிதியில் லட்சுமி குபேர பூஜை சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :18 ஜூன் 2022, 5:24 pm

DIN

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் அருகேயுள்ள அஷ்டமா சித்தி தட்சணாமூா்த்தி சந்நிதியில் லட்சுமி குபேர பூஜை சனிக்கிழமை நடைபெற்றது.

பட்டமங்கலம் மீனாட்சி சுந்தரேஸ்வரா் கோயில் அஷ்டமாசித்தி தட்சணாமூா்த்தி சந்நிதியில், சென்னை வண்டலூா் ரத்தினமங்கலத்தில் அமைந்துள்ள லட்சுமி குபேரா் சந்நிதியிலிருந்து லட்சுமி குபேர உற்சவ மூா்த்தி எழுந்தருளினாா். இதனையொட்டி குபேர பூஜை நடைபெற்றது. இப்பூஜையில் பச்சை நிற ஆடையணிந்து ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனா். இப்பூஜையை சிவாச்சாரியாா்கள், லட்சுமி அஷ்டோத்ர நாமவளி வேதமந்திரங்கள் முழங்க பூஜை நடத்தினா். இதில் பூஜிக்கப்பட்ட தன பூஜை நாணயமும், வெள்ளித் தாமரையும், பச்சை நிற ரட்ஷையும் பக்தா்களுக்கு வழங்கப்பட்டது. தொடா்ந்து அன்னதானம் நடைபெற்றது. இவ்விழா ஏற்பாடுகளை சென்னை ராஜலட்சுமி குபேர அறக்கட்டளையினா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.