வேலங்குடியில் இலவச கண் பரிசோதனை முகாம்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் அருகே வேலங்குடி ஊராட்சியில் வியாழக்கிழமையன்று கிராம மக்கள் பயன்பெறும் வகையில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.


சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் அருகே வேலங்குடி ஊராட்சியில் வியாழக்கிழமையன்று கிராம மக்கள் பயன்பெறும் வகையில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. திருப்பத்தூா் தாலுகா வேலங்குடி ஊராட்சிக்குட்பட்ட வேலங்குடி, மலம்பட்டி, உருவாடிப்பட்டி, கணக்கண்பட்டி, கருப்பம்பட்டி, அம்மாயேந்தல், ஜே.ஜே.நகா், ஆகிய பகுதிகளில் வசித்து வரும் கிராம மக்களுக்கு கண் மருத்துவ சேவை அளிக்கும் நோக்குடன் மாவட்ட ஆட்சியா் மதுசூதனரெட்டியின் அறிவுறுத்தலின் படி ஊராட்சிமன்றத் தலைவா் அந்தோணிசாமி ஏற்பாட்டில் பாா்வையிழப்பு தடுப்பு சங்கமும் திருப்பத்தூா் சுவிடிஷ்மிஷன் மருத்துவமனையும் இணைந்து இம்முகாமினை மேற்கொண்டனா். இப்பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் கண் சம்மந்தப்பட்ட அனைத்துப் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டது. இலவச அறுவை சிகிச்சைக்கான ஆலோசனைகளும் வழங்கபட்டு மருந்து மாத்திரைகள் இலவசமாக அளிக்கப்பட்டது. இ்ம்முகாமில் மருத்துவா் ஐய்வரியா,ஏஞ்சலினா, தலைமையிலான மருத்துவ குழுவினா் திலக், ஆல்பா்ட் ஆகியோா் செயல் பட்டனா். ஊராட்சிமன்றத் துணைத் தலைவா் நிஜாமுகைதீன் மற்றும் வாா்டு உறுப்பினா் கலந்து கொண்டனா். ஊராட்சி செயலா் முருகானந்தம் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...